Thursday, June 25, 2009

தமிழ்மணத்தில் ஓட்டுவாங்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ்மணம் பழம்பெருமை வாய்ந்த திரட்டிகளில் ஒன்று. மற்றவர்கள் எல்லாம் பதிவை இணைக்க மிகவும் எளிமையான வழிகளை வைத்திருக்க தமிழ்மணம் மட்டும் சில பல வழிமுறைகளைப் பயன்படுத்தி உலக சினிமா பார்ப்பது போல உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தமிழீஷில் யார் பதிவை யார் வேண்டுமானாலும் பதிவு என்றில்லை, எதோ ஒரு காகித வெட்டினைக்கூட இணைத்துவிடமுடியும்.

தமிழ்மணத்தில் இப்போது ஓட்டுப் போடுவது கொஞ்சம் கடினப் படுத்தி இருக்கிறார்கள். சில நேரங்களில் நமது இடுகைக்குக் கூட நம்மால் ஓட்டளிக்க முடிவதில்லை. வரலாறு பகுதியை அழித்துவிட்டு மீண்டும் ஓட்டளிக்க வந்தால் நமக்கு ஓட்டுரிமை கிடைப்பது கால தாமதம் ஆகிறது.

தமிழ் மணத்தில் ஓட்டு வாங்க ,முதலில் தமிழ்மணத்தில் நமது பதிவினை இணைக்க வேண்டும் அதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருக்கிறார்கள்.
http://www.tamilmanam.net/user_blog_submission.php

ஒவ்வொரு படியாக பயணிக்க சேர்த்துவிட முடிகிறது.

அடுத்து ஓட்டுவாங்க கருவிப் பட்டை அவசியமாகிறது. கருவிப் பட்டையை இணைப்பது எனபது பல கட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அதற்காண வழிகளை கீழ் உள்ளமுறையில் கொடுத்திருப்பார்கள்.

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html


இதில்
1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)
2. ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து (“Manage Layouts”) பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).
3. மீயுரை சீர்திருத்து (“Edit HTML”) என்கிற பகுதிக்குச் செல்க
4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க
5. இப்பொழுது மிக முக்கியமான ஒன்று
6. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்க.

blogger

வரையில் குழப்பம் இருக்காது.


7.சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து கீழிருக்கும் பெட்டியில் past செய்யவும்

அதைக் கூட நாம் செய்து விடுவோம்.

பேஸ்ட் செய்த பிறகு கீழே உள்ள அளி என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அழுத்திய உடனேயே நமக்கு கருவிப் பட்டையுடன் குறிப்புகள் கிடைக்கும். இங்கேதான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பழைய குறிப்புகளுக்கும், கருவிப் பட்டையுடன் கூடிய குறிப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இதில்தான் நாம் குழம்பிப் போகலாம். அதாவது பெரிய மாற்றங்கள் நமக்கு சரியாக தெரியாது. இருந்தாலும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிறகு

8. ”அளி” என்ற பொத்தானை அழுத்தியவுடன் தமிழ்மண கருவிப்பட்டை நிரலி உங்கள் அடைப்பலகை நிரலியில் இணைக்கப்பட்டு மேலே உள்ள பெட்டியில் தெரியும்.

9.மேலே உள்ள பெட்டியின் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து அதை உங்கள் சீர்திருத்துபெட்டி(“EditBox”) பெட்டியில் உள்ளவற்றை நீக்கிவிட்டு past செய்யவும்.

10.அடைப்பலகையை சேமிக்க

மேலதிக தகவல்களுக்கு பார்க்க தமிழ்மணம் பதிவு


தமிழ்மணத்தின் ‘பதிவு’ கருவிப்பட்டையிலே பிளாக்கர் பதிவுகளை இலகுவாக இணைக்கும் விதமாக, பதிவர் குழலி அடைப்பலகையை மேம்படுத்த எழுதியிருக்கும் நிரலை இங்கே காணலாம்.
http://www.kuzhali.co.nr/
இது குறித்த குழலியின் இடுகை
புது ப்ளாக்கர்க்கு தமிழ்மண கருவிப்பட்டையை சேர்ப்பது


========================================================

இது தமிழ்மணத்திலிருந்து எடுக்கப் பட்டது தான் கொஞ்சூண்டு பகுதி மட்டும் நமது சுய அனுபவ விளக்கம்

======================================================

நம் நண்பர்கள் சிலர் தமிழ்மணத்தில் இணைக்க சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடைக்குட்டி..,



அவர்களுக்கு ஏதாவது உதவினால் நன்றுதானே

======================================================

அதற்குப் பிறகு நமது பட்டையிலுள்ள கட்டைவிரலை அழுத்தி உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கலாம்.
=======================================================

எப்படியோ நானும் ஒரு தொழில்நுட்ப பதிவு போட்டுவிட்டேன்

32 comments:

  1. தல,

    //எப்படியோ நானும் ஒரு தொழில்நுட்ப பதிவு போட்டுவிட்டேன்//

    அப்ப, நீங்களும் ரவுடியா?

    ஹே, நோட் பண்ணுங்கப்பா.

    தலையும் ரவுடிதான், தலையும் ரவுடிதான்.

    ReplyDelete
  2. //தமிழ்மணம் பழம்பெருமை வாய்ந்த திரட்டிகளில் ஒன்று//

    இடுகைக்குள்ளேயே இன்னும் போகவில்லை!சில்மிஷம் செய்யும் இளைஞனை யோவ் பெருசுங்கிற மாதிரி திரட்டிஅண்ணனை புராதனப் பட்டியல்ல சேர்க்கிறீங்களே:)

    ReplyDelete
  3. நான் கூட ஏதோ குறுக்கு வழியெல்லாம் சொல்லித்தரப் போறீங்கன்னு நெனச்சேன். கடைசீல பார்த்த, டெக்னிகல் பதிவு.

    அப்ப நீங்களும் ஒரு மென்பொருள் கட்டுமான நிபுணர் ஆக வாய்ப்புகள் இருக்கு.

    ReplyDelete
  4. தல , ஓட்டுப் பட்டையை இடுகையின் அடியில் தோன்றச் செய்வது எப்படி?

    ReplyDelete
  5. இப்ப இடுகைக்கு போய் வந்தபின்....

    மருத்துவரின் முதல் உதவி புதுமுகங்களுக்கு பயன்படும்.

    (ஆமா!ஓட்டு போடுங்க ஓட்டு போடுங்கன்னு எல்லோரும் கேட்கறாங்களே காசு எம்புட்டு தருவாங்க என்கிற ரகசியத்தை மட்டும் யாரும் காதுல கூவமாட்டேங்கிறாங்களே?)

    ReplyDelete
  6. தினத்துக்கு ஒரு வால்போஸ்டர் ஒட்டறீங்களே:)

    ReplyDelete
  7. அடடா..

    இதுதான் அந்த வழியா..?

    நான்கூட வேற ஏதோ ஒரு வழி இருக்குன்னு நினைச்சு ஆசையா ஓடியாந்தேன்..!

    ReplyDelete
  8. நம் நண்பர்கள் சிலர் தமிழ்மணத்தில் இணைக்க சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடைக்குட்டி..,
    //

    இப்பிடியா சொல்றது பொது எடத்துல... :-)

    இருந்தாலும் திருப்பியும் முயற்சி செய்யுறேன்

    ReplyDelete
  9. அட போங்க தல.. வர மாட்டேங்குது..

    மொத தடவ நம்ம url குடுத்தா ஏற்கனவே இருக்குன்னு வருது...

    செரி பட்டைய நிறுவலாம்னு பாத்தா.. அதுல சொன்னா மாதிரி செஞ்சாலும் நடக்க மாட்டேங்கது...


    ஹ்ம்கூம்.. இது ஆவறுதில்ல...

    ReplyDelete
  10. ரவுடி வாழ்க!


    நல்ல பதிவு நண்பரே!

    ReplyDelete
  11. உங்க மருத்துவ ஆலோசனை மிகவும் பயனுள்ளது

    ReplyDelete
  12. நல்ல வ்ழிமுறைகளை சொல்லி இருக்கீங்க தல‌

    ReplyDelete
  13. தல சக்ஸஸ்... :-)

    என் வலையில் தமிழ் மணமா????

    ReplyDelete
  14. //King Viswa said...

    தலையும் ரவுடிதான், தலையும் ரவுடிதான்.//

    அட ஆமா

    ReplyDelete
  15. சிலவேளை "அளி" சரியாக வேலை செய்யாவிட்டால் தமிழ்மணம் வெப் சைட்டில் இடது பக்கம் (மாறும் படங்களுக்கு கீழ்) "ப்ளாகருக்கான பதிவுப்பட்டை" என்ற லிங்கை பயன்படுத்தினால் அதே போன்ற வெப் சைட் வரும் ஆனால் இதில் உள்ள "அளி" சரியாக வேலை செய்யும்.(பதிவு பட்டை இணைக்க நான் பட்ட பாட்டை இங்கு சொல்லி இருக்கேன்)

    உங்கள் சேவை தொடரட்டும்.

    ReplyDelete
  16. //ராஜ நடராஜன் said...

    சில்மிஷம் செய்யும் இளைஞனை யோவ் பெருசுங்கிற மாதிரி திரட்டிஅண்ணனை புராதனப் பட்டியல்ல சேர்க்கிறீங்களே:)//


    ரஜினி மாதிரி தல தமிழ்மணம்

    ReplyDelete
  17. //மயாதி said...

    தல , ஓட்டுப் பட்டையை இடுகையின் அடியில் தோன்றச் செய்வது எப்படி?
    //

    யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்

    ReplyDelete
  18. //ராஜ நடராஜன் said...

    தினத்துக்கு ஒரு வால்போஸ்டர் ஒட்டறீங்களே:)
    //

    சும்மா ஜாலியா.., அவ்வளவுதான் தல...,

    ReplyDelete
  19. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    அடடா..

    இதுதான் அந்த வழியா..?

    நான்கூட வேற ஏதோ ஒரு வழி இருக்குன்னு நினைச்சு ஆசையா ஓடியாந்தேன்..!
    //


    அப்படி ஏதாவது செய்தி கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
  20. //நட்புடன் ஜமால் said...

    ரவுடி வாழ்க!


    நல்ல பதிவு நண்பரே!
    June 25, 2009 5:49 PM
    நசரேயன் said...

    உங்க மருத்துவ ஆலோசனை மிகவும் பயனுள்ளது
    June 25, 2009 8:11 PM
    Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நல்ல வ்ழிமுறைகளை சொல்லி இருக்கீங்க தல‌
    //

    நன்றி நன்றி, மேலும் நன்றி

    ReplyDelete
  21. //கடைக்குட்டி said...

    தல சக்ஸஸ்... :-)

    என் வலையில் தமிழ் மணமா???//

    பதிவின் பயணம் தொடரும் தல...,

    வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  22. //அக்பர் said...

    சிலவேளை "அளி" சரியாக வேலை செய்யாவிட்டால் தமிழ்மணம் வெப் சைட்டில் இடது பக்கம் (மாறும் படங்களுக்கு கீழ்) "ப்ளாகருக்கான பதிவுப்பட்டை" என்ற லிங்கை பயன்படுத்தினால் அதே போன்ற வெப் சைட் வரும் ஆனால் இதில் உள்ள "அளி" சரியாக வேலை செய்யும்.(பதிவு பட்டை இணைக்க நான் பட்ட பாட்டை இங்கு சொல்லி இருக்கேன்)

    உங்கள் சேவை தொடரட்டும்.
    //

    நன்றி தல..,

    ReplyDelete
  23. கவுண்டர் அட்டாக்: இது மட்டும் போதாது ராசா.. பதிவு நல்லா இருந்தாலும் சம்பந்தப் பட்டவங்க ஓட்டும் போடணும், என்னடா நாராயணா இதெ யெல்லாம் சொல்லி தரவேண்டி இருக்கு!! எதிர் கட்சிக்காரன் பாத்தா என்ன நெனைப்பான்...

    ReplyDelete
  24. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    எதிர் கட்சிக்காரன் பாத்தா என்ன நெனைப்பான்...//

    ஆஹா

    ReplyDelete
  25. தமிழ்மணத்தில் ஓட்டுவாங்க என்ன செய்ய வேண்டும்? //

    நாங்க ஓட்டு விழூறதைப் பத்தின்னு நெனச்சா நீங்க வாக்குச்சாவடிக்கு போற வழியப் பத்தி பேசறீங்க போல......

    வாக்குச்சாவடியெல்லாம் ரெடியா வச்சுகினு இன்னி வரைக்கும் இந்த வாசகர் பரிந்துரையில வர்ற வழி என்னன்னு (நல்ல பதிவுதான் ஒரேவழின்னு மூளைக்கு தெரிஞ்சாலும்) மனசு கெடந்து தவிக்குது...

    நம்ம பதிவும் மொக்கை தான்னாலும், நம்மை விட மொக்ககயான பதிவுகள் பரிந்துரையில் ஏறும் போது ஏதாச்சும் சிண்டிகேட் போட்டு தொழில் பண்ணறாங்களா மக்கள்ங்கிற சந்தேகத்தையும் தவிர்க்க முடியலை.

    முதல்லயாவது , நமக்கு நாமே ஒரு ஓட்டுப் போட்டுக்கிடலாம்.

    ஆனா , இப்ப அதுக்கும் கூட தமிழ்மணம் ஆப்பு வச்சிடுச்சி....ஹிஹிஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹி

    ஓட்டு போடுறது இவ்ளோ கஷ்டம்னு அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது.....இன்னிவரைக்கும் ஓப்பன் ஐடியில் ஒரு ரெண்டு மூணு ஓட்டுத்தான் போட்டிரூப்பேன்...அதுக்கே ரெண்டு மூணு தரம் டிரை பண்ணனும்..

    இப்பவெல்லாம் தமிழமணம் ஓட்டுப்பட்டை பக்கமே போறதில்லே....!

    இதுல ஒரு கூத்து என்னண்ணா , நம்ம பதிவையும் மதிச்சி தமிழிஷ்ல 25 ஓட்டு விழுந்திருக்கும் ஆனா தமிழ்மணத்துல ஒரு ஓட்டு கூட விழுந்திருக்காது...

    இப்படிக்கு
    தமிழ்மணம் ஓட்டுக்காக ஏங்கும்

    உங்களில் ஒருவன....

    ReplyDelete
  26. //ஆ.ஞானசேகரன் said...

    நல்லா இருக்கு
    //

    //அனானி said...

    இதுல ஒரு கூத்து என்னண்ணா , நம்ம பதிவையும் மதிச்சி தமிழிஷ்ல 25 ஓட்டு விழுந்திருக்கும் ஆனா தமிழ்மணத்துல ஒரு ஓட்டு கூட விழுந்திருக்காது...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  27. // மயாதி said...

    தல , ஓட்டுப் பட்டையை இடுகையின் அடியில் தோன்றச் செய்வது எப்படி?//

    expand widget template போய்

    tamilmanam tool bar starts ஆரம்பித்து ends வரை எடுத்துக் கொண்டு

    tamilish ஓட்டுப் பட்டை அருகில் நிறுத்தி விட்டால் தமிழ்மணம் கருவிப்பட்டை கீழ் பகுதிக்கு வந்து விடும்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails