Tuesday, June 23, 2009

சன் மற்றும் விஜய் குழுமங்களுக்கு

பொன்னியின் செலவன். தமிழில் வாசகன் என்று சொல்லிக் கொண்டு யார் சுற்றினாலும் பொன்னியின் செல்வன் பற்றி கொஞ்சமேனும் தெரிந்திருப்பர். இணையத்தளங்களில் சுற்றி சுற்றி சுழற்றி சுழற்றி வளைத்து நெளித்து எழுதிவருகிறார்கள்.

பொன்னியின் செலவனை திரையில் காண்பது என்பது அரை நூற்றாண்டுகளாக தமிழனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெரிய பெரிய புத்தகங்களாக ஐந்து பாகங்கள் எழுதப்பட்ட புதினம் அது. சில {பல} ஆண்டுகள் தொடர்கதையாக வந்த கதை . தனியாக திரைக்கதை எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லாமல் கதையே திரைக் கதையாய் அமைந்த நூல் அது. அவ்வளவு விறுவிறுப்பான கதை திரைக்கதை கையில் இருக்கும் போது அதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை?

நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், வஞ்சிக் கோட்டை வாலிபன் , ஒளவையார், போன்ற படங்கள் வந்த காலத்திலேயே எடுத்திருக்கலாம். பட்ஜெட் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். இருந்தாலும் எடுக்கவில்லை. எடுக்காததன் காரணமாக சில விஷயங்களை கூறலாம்.

கதையின் போக்கு:-
கதையில் பல இடங்களில் பலமுக்கிய கதாபாத்திரங்கள் தென்படுகின்றன. பொருத்தமான ஆட்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆதித்த கரிகாலர், அருண்மொப்ழிவர்மர், வந்திய தேவன் போன்ற பாத்திரங்களுக்கு சரியான ஆட்கள், ஈகோ விட்டுக் கொடுத்து நடிக்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம்.

பட்ஜெட்:-
எழுபதுகளில் நிறைய நாயகர்கள், நாயகிகள் இருந்தாலும் பட்ஜெட் அதிகமாக வந்திருக்கக் கூடிய வாய்ப்புகள். கலரில் எடுத்தாக வேண்டிய கட்டாயம். ஒருவேளை ராஜராஜ சோழன் படத்திற்கு கூட முதலில் இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருக்க கூடிய வாய்ப்புகளே அதிகம். பட்ஜெட் மிக மிக அதிகமாக போயிருக்கும்.

முடிவு:-
புதினத்தின் முடிவில் பொன்னியின் செல்வன் மகுடத்தைத் தூக்கி உத்தமச் சோழன் தலையில் சூடுவதை சினிமா பிரம்மாக்களும், சராசரி ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்களா.... கண்டிப்பாக வாய்ப்பில்லை. பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தீக்குளிக்க க் கூட தயங்க மாட்டார்கள். சரித்திர கதையாய் போய்விட்டதால் முடிவை மாற்றவேவேவே முடியாது.

கல்கி:-
கல்கியின் வர்ணனைகளை காட்சியாக்குவது என்பது ஒரு தவம் போன்று செய்யவேண்டிய ஒன்று. பல காட்சிகளை திரைக்கு கொண்டுவரும் அளவுக்கு தொழில்நுட்பம் சென்ற நூற்றாண்டின் இறுதிவரைக்கும் கூட கிடையாது.

80களில்
இளம் நடிகர்களின் ஆதிக்கத்தில் வந்ததால் பாத்திரங்களை தாங்கும் வல்லமை படைத்த நடிகர்களும். பட அதிபர்களும் இயக்குநர்களும் சரித்திர கதைகளிலிருந்து விலகியே இருந்தார்கள்.



இன்றைய சூழல்:-

இன்றைய சூழல் அற்புதமாக இருக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், உத்தம சோழன் கதாபாத்திரங்களை ஏற்றுக் கொள்ள சரியான ஆட்கள் இருக்கிறார்கள். ஆட்கள் என்பதைவிட ஆள் என்பது சரியாக இருக்கும். ஆம். கமலஹாசன்தான் அவர். அவரையே இந்த வேடங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லலாம். இறுதிக்காட்சியில் கமலஹாசனுக்கே பட்டம் சூட்டப் படுவதால் ரசிகணும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள், பராந்தகச் சோழன் மற்றும் பழைய காட்சிகளில் வரும் பல சோழச் சக்கரவர்த்திகள் கதாப்பாத்திரங்களையும் கமலஹாசனையே செய்யச் சொன்னால் அவருக்கும் ஒரு சாதனை படைத்த மாதிரி இருக்கும்.


வந்தியத் தேவன் கதாபாத்திரத்தைக் கூட கமல ஹாசனைச் செய்யச் சொல்லலாம். என்ன கூடுதல் மேக் அப் தேவைப் படும். [மற்றவர்கள் ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள். இவர் வேறு குலம். எனவே வித்தியாசம் தெரியவேண்டாமா..... } ஆனால் எந்த ஈகோ பிரச்சனை யும் ஏற்படாது.

நந்தினியாக நயந்தாராவையும், குந்தவையாக நமீதாவையும் போட்டுவிடலாம். வானதி, மணிமேகலை பாத்திரங்களுக்கு பாவனா, சமிக்ஷா போன்றவர்களைப் போட்டுவிடலாம். வீரப்பாண்டியன், பழுவேட்டரையர் போன்ற பாத்திரங்களுக்கு நெப்போலியன் பிரகாஷ்ராஜ் போன்றவர்களை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

கிராஃபிக்ஸ் உபயோகப் படுத்தி முடிந்தவரை கல்கியின் காட்சிகளை கொண்டுவந்துவிடலாம்.

படத்தின் செலவுதான் கண்டபடிஆகும். ஆனால் அதற்கு ஒரேவழிதான் இருக்கிறது. சன் டி,வி. அவர்களால்தான் இது முடியும். ஏற்கனவே பட்ஜெட் பிரச்சனையால் தள்ளாடிய பல படங்களை அவர்கள் காப்பாற்றியுள்ளனர். தமிழ் வாசகனின் பலநாள் ஏக்கத்தை அவர்களால் மட்டுமே தீர்க்க முடியும்.


திரைப்படமாக எடுக்கும் வாய்ப்பு அமையா விட்டாலும் குறைந்தபட்சம் மெகா சீரியலாகவாவது எடுக்க வேண்டும். நந்த்னிக்கும் குந்தவைக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் பெண்கள் மத்தியில் பயங்கர வரவேற்பினைப் பெறும். நந்தினிக்கு நடக்கும் சோகங்கள் பெண்கள் மத்தியில் ரத்தக் கண்ணீரை வரவைக்கும்.


ஒட்டுமொத்த தமிழ்ரசிகர்களின் அரைநூற்றாண்டு கனவினைத்தீர்க்கும் வலிமை சன் டி.வி.க்கு மட்டுமே உண்டு. நிறைவேற்றி வைப்பார்களா?
=====================================================================
இது ஒரு மீள்பதிவு. இதை சன் டி.வி. மட்டுமல்ல , விஜய் டி.வி. கூட செய்ய முடியும். செய்வார்களா?
=====================================================================

இது தொடர்பாக ஏற்கனவே வெளிவந்துள்ள இடுகை இது. செப்-2007 எழுதப்பட்டது. புருனோ அவர்களால் பின்னூட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதும் இதுவே.

45 comments:

  1. படமா வந்தா நன்றாகத்தான் இருக்கும்,குறிப்பாக இலங்கை காட்சிகள் மிகவும் நேர்த்தியான வர்ணனை

    ReplyDelete
  2. வாருங்கள் நாடோடி இலக்கியன் அவர்களே................


    இன்றிருக்கும் சூழல் அற்புதமானது. இந்த வாய்ப்பினை தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  3. சுரேஷ் உங்களோட ஃபாண்ட் வண்ணத்தை உங்கள் டெம்ப்ளேட் வண்ணத்திற்கு தகுந்தபடி சரி படுத்துங்கள். படிக்க சிரமமாக உள்ளது

    ReplyDelete
  4. //நந்தினியாக நயந்தாராவையும்//

    உத்தம சோழன் கமல் என்றால் நந்தினியும் கமல் தானே

    : :)

    ReplyDelete
  5. சுரேஷ்,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நல்ல யோசனை.

    //
    ஆட்கள் என்பதைவிட ஆள் என்பது சரியாக இருக்கும். ஆம். கமலஹாசன்தான் அவர். அவரையே இந்த வேடங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லலாம்.
    //

    காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?!

    ReplyDelete
  6. கலைஞர் தொலைக்காட்சியில் தொடராக வரும் என்று கூறினார்கள்

    நாகா (மர்மதேசம் இயக்குனர்) இயக்கி கொண்டிருந்தார்

    ReplyDelete
  7. இங்கு பார்க்கவும் http://tinyurl.com/9pwlct

    ReplyDelete
  8. வாருங்கள் கிரி,
    புருனோ,
    இளைய பல்லவன் அவர்களே

    ReplyDelete
  9. //உத்தம சோழன் கமல் என்றால் நந்தினியும் கமல் தானே//

    கமல் செய்தாலும் செய்வார்.


    நயந்தாரா செய்தால் என்னைப் போன்ற வெகுஜன ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்

    ReplyDelete
  10. அந்த கதைக்கு பொருத்தமானவர்கள் என்றால்

    1980களின் ரஜினி - வந்தியத்தேவன்
    சுகாசினி - குந்தவை

    1980களின் கமல் - அருண்மொழி
    ஸ்ரீதேவி - வானதி

    ReplyDelete
  11. //காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?!//


    காமெடி என்பதும் சீரியஸாக செய்ய வேண்டிய விஷயமே...

    அப்போதுதான் மக்கள் ரசிப்பார்கள்

    ReplyDelete
  12. //அந்த கதைக்கு பொருத்தமானவர்கள் என்றால்

    1980களின் ரஜினி - வந்தியத்தேவன்
    சுகாசினி - குந்தவை

    1980களின் கமல் - அருண்மொழி
    ஸ்ரீதேவி - வானதி//



    இப்பொழுதும் ரஜினியையும் கமலையும் மேக்கப் போட்டு கொண்டுவந்து விடலாம்.

    ReplyDelete
  13. //குந்தவையாக நமீதாவையும் போட்டுவிடலாம். //

    அவ்வ்வ்வ்வ்வ் இது மட்டும் நடந்தா நான் உங்களுக்கு மொட்டையடுச்சு வேல் குத்தறதா வேண்டியிருக்கேன்

    ReplyDelete
  14. //இது மட்டும் நடந்தா நான் உங்களுக்கு மொட்டையடுச்சு வேல் குத்தறதா வேண்டியிருக்கேன்//


    எனக்கு??


    இருப்பதில் அதுபோன்ற டாமினேட்டிங் பாத்திரத்திற்கு அவரே பொருத்தமாக இருப்பார். கல்கியின் வருணனைகளை ஓரளவு அவர் பூர்த்தி செய்கிறார் என்பதே உண்மை.

    ReplyDelete
  15. //கல்கியின் வருணனைகளை ஓரளவு அவர் பூர்த்தி செய்கிறார் என்பதே உண்மை.//

    நமீதா கல்கியின் வர்ணனைகளை பூர்த்தி செய்கிறாரோ இல்லையோ சாண்டில்யணின் வர்ணனைகளுக்கு ஏற்றவர்.

    நயன் தாராவும் தான் :)

    ReplyDelete
  16. கல்கியின் எந்தவொரு படைப்பும் சினிமாவாகும் போது அது ஏமாற்றத்தையே தருகிறது. தியாக பூமி, கள்வனின் காதலி, பார்த்திபன் கனவு இவையனைத்தும் படித்ததைப் போல் இல்லை.

    பொன்னியின் செல்வனோ கல்கியின் 'மேக்னம் ஓபஸ்'. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு பரிமாணத்தைக் காட்டும். இதை திரையோவியமாகக் காட்டுவதென்பது அனைவரையும் திருப்திப்படுத்தும் செயலாக அமையாது.


    அது தொடராக வந்த போது வரையப்பட்ட ஓவியங்களையே எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்குமே. என்னைப் பொருத்தவரை வந்தியத்தேவனுக்கு விக்ரம் அல்லது சூர்யா, அருள்மொழிவர்மனுக்கு விஜய். சிலர் ரஜினி கமல் என்று நினைப்பார்கள். சிலர் எம்ஜியார் சிவாஜி என்றுகூட நினைத்திருக்கலாம். அது போல் குந்தவை நந்தினிக்கு வைஜயந்திமாலா முதல் பாவனா வரை லிஸ்ட் நீளும்.

    பொன்னியின் செல்வன் அலெக்சான்டர் டூமாவின் 'த்ரீ மஸ்கடீர்' இன் தழுவல் என்று கூறலாம். த்ரீ மஸ்கடீர் கூட திரைப்படமாக்கப் பட்ட போது பெரும் வெற்றி பெறவில்லை. ஆகவே பொன்னியின் செல்வன் திரைக்காவியம் பெரும்பாலோருக்கு ஏமாற்றத்தைத் தரலாம்.

    ReplyDelete
  17. சரித்திர கதைகளை படமாக்கும் போது முக்கிய சஸ்பென்ஸ் , படக்காட்சியின் போது முதலிலேயே வெளிப் பட்டுவிடுவது ஒரு காரணமாக இருக்கலாம்.


    பார்த்திபன் கனவில் சாமியார் யாரென்று முதலிலேயே தெரிந்து விடுகிறது.


    முடிவினை நாம் நிர்ணயிக்க முடியாததும் ஒரு காரணம்.


    பொ.செ.வில் வந்திய தேவன் ராஜாவானால் படம் பெரிதும் வெற்றியடையும். ஆனால் அப்படி செய்யமுடியாது. குறைந்தபட்சம் பொ.செ.வே பட்டம் சூட்டிக் கொண்டால் ஓரளவு நன்றாக இருக்கும். அதுவும் முடியாது.


    ஒரு சாமியார், அதுவும் அரச வீரம் என்பதே இல்லாத ஒருத்தரிடம் பட்டம் கொடுப்பதும் படத்தை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

    அதற்காகத்தான் அந்த இரண்டு வேடங்களையும் ஒருவ்ரே செய்யும்போது ரசிகர்களை ஏமாற்றமடைவது தவிர்க்கப் படும். இரண்டு வேடம் என்பதைவிட ஐந்தாறு சோழர்களாகவும் நாயகன் நடிப்பது பல பிரச்சனைகளை தவிர்த்து விடும்.

    ReplyDelete
  18. நந்தினியின் வாழ்க்கை வரலாறு, அபியின் வாழ்க்கையை விட பெண்கள் மத்தியில் அதிக பரிதாப ஓட்டுக்களைப் பெறவைக்கும்.

    ReplyDelete
  19. VERY GOOD IDEAS...BUT LOTS OF BIG SHOTS HAS TO COME INTO ONE SINGLE FORUM, TO MAKE THE FILM.... PROJECT..... "PONNIYIN SELVAN"...TO GET IT MATERIALISED...HOWEVER, THE VIEWS FROM THE AUTHOR AND THE COMMENTS ALSO SHOULD BE TAKEN INTO CONSIDERATION...POSSIBLE..

    ReplyDelete
  20. //
    காமெடி என்பதும் சீரியஸாக செய்ய வேண்டிய விஷயமே...
    //
    kuselan mathiri thaane

    ReplyDelete
  21. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் SURESH

    ReplyDelete
  22. வாருங்கள், RAMASUBRAMANIA SHARMA அவர்களே.,

    ஆளவந்தான் அவர்களே,,

    RAMYA அவ்ர்களே,,

    ReplyDelete
  23. ////
    காமெடி என்பதும் சீரியஸாக செய்ய வேண்டிய விஷயமே...
    //
    kuselan mathiri thaane////



    அது சீரியஸான விஷயத்தை காமெடியாக்கிய ஒன்று.

    ReplyDelete
  24. பிரிச்சு மேய்றதுனா இதுதான் தல.. கலக்கல்..

    நம்ம பக்கம் வர்றத நிறுத்துனதுல ஏதாவது கோவம் காரணாமா இல்ல வேலைப்பளுவா தல??

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! என் வலைப்பதிவையும் மதிச்சு பின் தொடர முடிவெடுத்ததற்கு நன்றி :-)

    ReplyDelete
  26. இன்னமும்
    பொன்னியின் செல்வன் மதிப்பு கெடாமல்
    இருப்பதற்கு காரணம்
    அதை யாரும் படமாக எடுத்து கெடுக்காமல் இருப்பதால்தான்.
    உங்களுக்கு ஏன் எந்த ஆசை

    ReplyDelete
  27. படம் எடுத்தா எத்தனை பார்ட் எடுப்பது?
    படம் நீளமா இருக்குமே!
    மக்கள் பாக்கணுமே!!!
    தேவா..

    ReplyDelete
  28. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    narsim அவர்களே,,

    பாசகி அவர்களே,,

    thevanmayam அவர்களே,,

    மற்றும் பெயரில்லா அவர்களே...

    ReplyDelete
  29. // பெயரில்லா கூறியது...

    இன்னமும்
    பொன்னியின் செல்வன் மதிப்பு கெடாமல்
    இருப்பதற்கு காரணம்
    அதை யாரும் படமாக எடுத்து கெடுக்காமல் இருப்பதால்தான்.
    உங்களுக்கு ஏன் எந்த ஆசை//



    //thevanmayam கூறியது...

    படம் எடுத்தா எத்தனை பார்ட் எடுப்பது?
    படம் நீளமா இருக்குமே!
    மக்கள் பாக்கணுமே!!!//




    இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருமை கிடைக்கும். கண்டிப்பாக படம் எடுத்தே தீர வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆசை...

    ReplyDelete
  30. it is better to be as teleserial than movie. Teleserial would be real hit like ramayanam

    ReplyDelete
  31. டைரக்ட்ர் வாய்ப்பு எனக்கு கொடுங்க

    ReplyDelete
  32. SUREஷ் பதிவுகள் பார்க்கிறேன்.கருத்துக் கூறும் அளவிற்கு அறிவு போதாது.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இன்னும் நிறைவாய் எழுதுங்கள்.

    ReplyDelete
  33. சன் டிவி செய்ய தயாரானாலும் யார் Sponsor ..?? அதுதானே மில்லியன் டாலர் கேள்வி..

    குத்துபாட்டுக்கும் இரட்டை அர்த்த சிரிப்பிற்கும் தான் Sponsor கிடைக்கிறாங்க..??

    புத்தாண்டில் நமது கனவு நனவாகுமா என்று.. பலரின் ஏக்கத்தின் குரல் பதிவு உமது..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. hi friends, Namitha is 100% not suitable for Kundavai character. becoz Kundavai was a very very intelligent and fair. Namitha may fair, but not suitable for intelligent character. now in cine field intelligent and fair girl is Asin only. If we see the Asin face we know that girl is a intelligent. and one more Actor is Nathiya.So Asin is only one suitable for kundavai character.

    ReplyDelete
  35. hi friends, Namitha is 100% not suitable for Kundavai character. becoz Kundavai was a very very intelligent and fair. Namitha may fair, but not suitable for intelligent character. now in cine field intelligent and fair girl is Asin only. If we see the Asin face we know that girl is a intelligent. and one more Actor is Nathiya.So Asin is only one suitable for kundavai character.

    ReplyDelete
  36. சுந்தர் சார்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....


    ஒரு சின்ன சந்தேகம்...

    நீங்க இயக்குநர் சுந்தர்,சி. தானே?

    ReplyDelete
  37. venkatesh சார்

    நசரேயன் சார்

    ஹேமா மேடம்,

    வண்ணத்துபூச்சியார்

    தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  38. தசாவதாரத்தின் ஹேங்கோவரிலிருந்தே நாங்கள் இன்னும் விடுபடவில்லை. இதிலும் கமல் எல்லா பாத்திரத்திலும் நடிக்க வேண்டுமா. சிவாஜியின் இறுதிக்காலத்தில் எவ்வாறு அவர் வீணடிக்கபட்டாரோ, அதே போல் கமல் தன்னை தானே வீணடித்து கொண்டிருக்கிறார்.

    இயக்கம், திரைக்கதையில் மூக்கை நுழைக்காது கமல் நடித்துவிட்டு மட்டும் போகலாம். எதற்கு டி.ஆர் போல் எல்லாவற்றையும் தன் தலையில் போட்டு கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  39. ரொம்ப முன்னாலேயே நீங்கள் ஸ்கெட்ச் போட்டு வைத்துவிட்டிர்கள்.சில பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ இல்லாத முகங்களைப் போட்டால்தான் மனதில் நிற்கும்.

    நன்றி.

    ReplyDelete
  40. சமீபத்தில் படித்த செய்தி....இயக்குனர் மணிரத்தினம் +இசைஞானி இளையராஜா இருவரும் சேர்ந்து முயற்சி செய்வதாக....பார்க்கலாம்...கனவுகள் சில நேரங்களில் பலிக்கலாம்....

    ReplyDelete
  41. //கே.ரவிஷங்கர் said...

    ரொம்ப முன்னாலேயே நீங்கள் ஸ்கெட்ச் போட்டு வைத்துவிட்டிர்கள்.சில பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ இல்லாத முகங்களைப் போட்டால்தான் மனதில் நிற்கும்.

    நன்றி.
    //



    உண்மைதான் தல

    ReplyDelete
  42. //RAMASUBRAMANIA SHARMA said...

    சமீபத்தில் படித்த செய்தி....இயக்குனர் மணிரத்தினம் +இசைஞானி இளையராஜா இருவரும் சேர்ந்து முயற்சி செய்வதாக....பார்க்கலாம்...கனவுகள் சில நேரங்களில் பலிக்கலாம்....
    //



    அது தொடர்பாக நான் ஏற்கனவே எழுதிய இடுகை

    இந்த இடத்தில் உள்ளது

    தயவு செய்து படித்துப்பாருங்கள். அதில் உள்ள ஆபத்தினை உணர்ந்து கொள்ளுங்கள். எனக்கென்னவோ அந்த முயற்சி ஒரு சர்வதேச சதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails