Sunday, May 31, 2009

சிகரட் ஏன் பிடிக்க படுகிறது?

சிகரட் பிடிக்கும் வழக்கம் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய ஆராய்ச்சிதான் இது

௧.சிகரட் பிடிப்பவர்களின் குழந்தைகள் மிக விரைவில் சிகரெட் பிடித்துப் பழகிவிடுகிறார்கள்

௨.சிகரட் எளிதில் கிடைக்கும் இடத்தில் இருப்பவர்கள் உடனே பழகி விடுகிறார்கள். விடுதிகள், ஆளில்லா நண்பர் வீடுகள் இவர்களுக்கு சாதகமாய் அமைகின்றன்.

௩.சிகரட் வாங்கும் அளவு பணப் புழக்கம் முக்கியமானது.

௪.தானே சம்பாதிக்கும் பணத்திற்கு வேறு செலவு இல்லை என்றாலும் சிகரெட் முக்கிய செலவாகி விடுகிறது

௬.நண்பர்கள் சிகரெட் பழக்கம் இருந்தால் ............

௭.சிகரட் பிடித்தல் ஒரு சாகஸம் போல் கருதப்படும்போது.



௮.ஒரு பெரிய மனித தன்மையாக கருதப் படுகிறது. ஒரு கனவு நாயகன் எண்ணத்தை மனதில் விதைக்கிறது.

௯.அலுவலக சகாக்களை மிக எளிதில் நண்பர்களாக்கும் வசதி கொண்டது.

10 புகையிலை உற்பத்தி வியாபாரம் அதிகரிப்பதால்

௧௧. குறைந்த விலையில் கிடைப்பதால்

௧௨.டென்சன் ரொம்ப அதிகம் எனக் கருதப் படுவதால்

௧௩.அடிக்கடி லீவ் எடுக்க முடியாத சூழலில்..................................................


டிஸ்கி:- இந்தச் சூழ்நிலைகளைத் தவிர்த்தால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடமுடியும்.

டிஸ்கி2:-இன்று புகையிலை எதிர்ப்பு நாள். மே-31

Saturday, May 30, 2009

கூரையேறி கோழி பிடிக்க....













சென்ற ஆண்டு 20-20 உலகக் கோப்பைக்குப் போன இந்திய அணிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. இந்தியாவில் கூட பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எதோ இரண்டாம்தர அணியை அனுப்புவது போல்தான் அனுப்பினார்கள். இந்திய அணி கேப்டன் டிராவிட் கலந்து கொள்ளவில்லை. அவருடன் சச்சின், கங்கூலி ஆகியவர்களும் இல்லை. இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் என்ற எண்ணத்திலேயே பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு ஏதேதோ காரணங்களால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது காமன்வெல்த் போட்டிகளுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது போல இருந்தது.


அதற்கு முந்தைய காலத்தில் இந்திய அணி முத்திரை ஆட்டத்தைக் காட்டியிருந்ததால் ஜாம்பவான்கள் இல்லாத இந்திய அணியை நம்ம்மூர் ரசிகர்கள் ஸ்கூல் அணியாகவே பார்த்தனர். போட்டிகள் 20-20 என நடந்ததுவேறு அதை உறுதி படுத்தியது. நம்மூர் பள்ளிமாணவர்கள் அந்த அளவில்தானே விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சுக்கோ ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், ஜோகிந்தர் சர்மா, என்று குட்டி பசங்க., பதான், பஜன் இவங்கதான் சீனீயர்ஸ்..,

வந்தால் மலை என்பதை தாரக மந்திரமாய் சிங்கம் போல முடி வைத்திருந்த தலைவரின் பின்னே அணிவகுத்துச் சென்றது இந்திய அணி.

அவ்வப்போது சின்ன சின்ன அதிர்ச்சிகள் கொடுத்து அரையிறுதிப் போட்டியில் நுழைந்து கடைசியில் வென்று கோப்பையுடன் வந்து டெண்டுல்கர், டிராவிட், கங்கூலி முதலான அனைத்து மக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

ஒருநாள் அணியின் தலைவராக நியமணம் செய்யப் பட்ட பின்னரே டோனிக்கு பொறுப்பு வந்து சக்தி கமல் மாதிரிமுடிவெட்டிக் கொண்டார்.
=============================================================

ஆனால் இன்று இருக்கும் இந்திய அணி

பல சாதனைகள் படைத்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் முதலிடம் பெற வைக்கும் சில முக்கியப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறது ( அந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் ஒருவேளை தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கலாம்).

சேவக்,கம்பீர்,யுவராஜ்,டோனி,ரெய்னா,ரோஹித் என்ற பலம்பொறுந்திய பேட்டிங் வரிசை பதான்ஸ்,பிரவீன்,ஜாகிர், ஆர்,பி,சிங்,ஹர் பஜன்சிங் போன்ற வலிமைவாய்ந்த ஆட்ட்க் காரர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக மட்டை பிடிப்பவரின் பின்னால் நின்று வியூகம் அமைக்கும் தலைவர் என்று சிறப்பான
அணி செல்கிறது. பயிர்ச்சியாளர் கிரிஸ்டன் இருக்கிறார்.


சேவக் ஃபார்மிற்கு திரும்புவார் என்ற நம்பிக்கையையும் அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும் என்ற வார்த்தைகளையும் சொன்ன டோனி

மோசமான நாளாக அமைந்தால் சராசரி அணிகூட தங்களைத் தோற்கடித்துவிடக்கூடும் என்ற பொன்மொழியையும் கொடுத்து இருக்கிறார்.

===================================================================

வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்களைக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி இருக்கும் டிராவிட்,டெண்டுல்கர் ,லார்ட்ஸ் மைதானத்தில் சதம் கண்ட கும்ளே, இந்திய அணிக்கே ஆக்ரோஷத்தைக் கொடுத்த கங்கூலி ஆகியோருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து ஆலோசகர்கள் என்று அழைத்துச் சென்றிருக்கலாம். குறைந்தபட்சம் சிலரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம்.

===================================================================

சென்ற ஆட்டத்தில் சின்ன அணியாகச் சென்றதால் மற்ற அணியினர் பெரியதாக மதிக்காத காரணத்தால் இழப்பதற்கு ஒன்றுமில்லை பாணியில் ஆடி கோப்பையைத் தட்டி வந்தனர்.

ஆனால் இப்போதோ முக்கிய அணிகளில் ஒன்றாக விளங்குவதால் இப்பொதைய இந்திய அணியின் விளையாடும் பாணியை டி.வி.டி மூலமாகப் பார்த்து வியூகங்கள் அமைக்கப் பட நேரிடலாம். இதனால் மற்ற அணி வீரர்களுக்கு பயங்கர மகிழ்ச்சி அடையும் வாய்ப்பும், இந்திய அணிக்கு நாமம் சாத்தும் வாய்ப்பும் இருப்பதால் இந்திய அணியின் விளையாட்டுக்கு ஒரு சவால் காத்திருக்கிறது.

=======================================================

Friday, May 29, 2009

இதுக்கு மட்டும் அழிவே கிடையாது.

டெஸ்ட் போட்டிக்கு மதிப்பு மரியாதை குறையும் என்றும், குறையாது என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். புதிய வடிவம்தான் மக்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
=================================================================
கும்ளே கூட டெஸ்ட் போட்டி அழியவே அழியாது என்று இன்று கூறியுள்ளார்

=================================================================

அடிப்படையில் டெஸ்ட் போட்டி எப்படி விளையாடப் படுகிறது என்று பார்க்க வேண்டும். மட்டை பிடிப்பவர்கள் பந்துக்களைப் பார்த்து ஆடுகிறார். அடித்து ஆடவேண்டிய பந்துக்களை அடிக்கிறார்.

தடுத்து ஆட வேண்டிய பந்துக்களை அடித்து ஆடுகிறார்கள். பந்து வீச்சாளர்களும் தொடர்ச்சியாக பந்து வீசுகிறார்கள். மட்டையாளர் ஏமாறும்போது அல்லது களைப்படையும்போது பந்துவீச்சாளர் சரியான அளவில் பந்துபோட்டு அவரை ஆட்டமிழக்கச் செய்வார். ஆட்டமிழக்கும் வகையில் திட்டமிட்டு களத்தடுப்பு அமைக்கப் படுகிறது.

சில நேரங்களில் ஓட்டங்கள் அதிகமாக எடுக்கப் பட்டாலும் அதைப் பற்றி பெரிதாக கவலைப் படாமல் தொடர்ச்சியாக பந்துவீசப் படுகிறது.

வேகமும் ஆக்ரோஷமும் இருந்தாலும் நிதானம் மிக முக்கியப் பங்கு வகிக்கப் படுகிறது. ஓட்டங்கள் ஓடும்போது நீண்ட நேரம் விளையாடும்வகையில்தான் ஓட்டங்கள் எடுக்கப் படுகின்றன.

விக்கெட் வீழ்த்துவதும், விக்கெட் விழாமல் தடுத்து ஓட்டங்கள் எடுக்கும் வகையிலும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடப் படுகிறது


20-20 கிரிக்கெட்

இந்த வகை ஆட்டத்தில் நிதானம் என்பது பின்னுக்குத் தள்ளப் பட்டு ஓட்டங்கள் குவிப்பது மட்டுமே முன்னால் நிற்கிறது. (அதை விட பொழுதுபோக்கு விவகாரங்கள் முன்நிற்கிறது).

ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் முக்கிய இரண்டுவிக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் அடுத்த சில ஓவர்களில் வரும் ஆட்டக்காரர்கள் விக்கெட் விழாமல் தடுக்க முயற்சி செய்யும் போது ஆட்டம் மற்றொரு அணிக்குச் சென்று விடுகிறது. இந்த சூழலில் தப்பிப்பது என்பது பந்துவீச்சில் பெரும் வெற்றியைப் பொறுத்துதான் அமையும். மட்டையாளர்கள் மீண்டு அணியை மீட்டுவருவது மிக அபூர்வ்மே


டெஸ்ட் ஆட்டத்தில் அப்படி இருப்பதில்லை. எத்தனை விக்கெட்கள் போனாலும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் நிதானமாக மட்டைபிடிக்க வழியிருக்கிறது. கும்ளே இவ்வாறுதான் மட்டையாளராக மாறினார். லார்ட்ஸ் மைதானத்தில் கூட சதம் அடிக்க முடிந்தது. இப்போதைய ஆல்ரவுண்டர் வெட்டோரி கூட இந்த முறையிதான் ஆல்ரவுண்டராக மாறினார்.

ஆனால் 20-20 போட்டியில் அது சாத்தியமில்லை. அப்படியே அதிரடியாக ஆடி 20அல்லது30ரன் சேர்த்தால்கூட அது வெறும் குத்தாட்டமாகவே அமையும்.

ஒருபந்துவீச்சாளர் 4 ஓவர்கள் ரன்கொடுக்காமல் பந்துவீசிவிட்டால் அந்த ஓவர்களுக்கு இணையான 4 ஓவர்களிலும் ரன் எடுக்க சிரமப் பட்டு மட்டை பிடிக்கும் அணியினர் சரணடையும் சூழல் ஏற்படுகிறது.

ஆனால் டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் எவ்வளவு அதி அற்புதமாக பந்துவீசினாலும் அவர் பந்துகளை தடுத்து தப்பித்துவிட்டு வாய்ப்பு வரும்வரை நின்றிருந்து பின்னர் அடித்துக் கொள்ளலாம்.

அதேபோல் 20-20 போட்டிகளில் அவசரப் பட்டு அவுட் ஆனால் அதோடு அந்த ஆட்டம் முடிகிறது. டெஸ்ட்டில் இரண்டாம் சுற்றும் நடைபெறுவதால் மட்டக்காரர்களுக்கு ஒருவாய்ப்பாக அமைகிறது.

இதெல்லாம் விட 20-20 விளையாடும்பொது அடிக்கடி காயம் படும் வாய்ப்பு உள்ளது. 20-20 விளையாட்டில் அதிக ரன் எடுக்க வேண்டிய அவசியத்தில் ரிஸ்க் எடுத்து சில முரட்டுத்தனமான ஆட்டங்களை ஆட வேண்டிய அவசியம் ஏற்படுவதால் காலப் போக்கில் அதுதான் ஆட்டமுறையாக மாறி கிரிக்கெட் மட்டையாளர்கள் காட்டடி அடித்து தங்கள் ஆட்டத்திறனை இழக்கின்றனர். அதற்கடுத்து அவர்களை பந்து வீச்சாளர்கள் சுலபமாக ஆட்ட்மிழக்கச் செய்து வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.

===============================================================
தேசிய அணியிலிருந்து கட்டாய ஓய்வு வாங்கிக்கொண்டு ஐ.பி. எல் விளையாடும் பெருந்தலைகள் நன்றாக விளையாடாத சூழலில் வெளியே உட்காரப் படவைக்கும் வாய்ப்பும் அடுத்த ஏழத்தில் மிகக்குறைந்த ஏலம் போகும் வாய்ப்பும் இருப்பதால் அவர்களும் ஒருவழியாக ஓரம் கட்ட்ப் படுவார்கள்.

================================================================

20-20ல் விளையாடாத ஆட்கள் டெஸ்ட்டில் ஒழுங்காக விளையாடி தங்கள் மட்டைத் தொழில்நுட்பத்தினை நிரூபித்தால் மீண்டும் 20-20 அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் 20-20ல் நன்றாக விளையாடுபவர்களை டெஸ்ட்டில் சேர்ப்பது அபூர்வமே..

இது ஏற்கனவே ஒருநாள் ஆட்டத்தில் நிரூபணம் ஆயிருக்கிறது. ஹெய்டன், கம்பீர் போன்றவர்கள் டெஸ்ட்டில் நன்றாக ஆடி ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் யுவராஜ் நிலமை..? கங்கூலிக்கு கட்டாய ஓய்வு கொடுத்துத்தான் அவருக்கு அணியில் இடம் கொடுக்க முடிந்தது. இல்லையென்றால் கடைசிவரை பதிலி யாக வே இருந்து அடிக்கடி அணியில் இடம்பெறும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டே இருந்திருப்பார். நிறந்த இடம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.

===============================================================

அணித்தலமைப் பண்பு பற்றிக் கூட் ஒரு கேள்விக்குறி இருந்துக் கொண்டிருக்கும்.
டோனி20-20 உலகக் கோப்பை வாங்கிய பின்னும் கூட கிரிக்கெட் தெய்வங்கள் அவரை வயதுக்குவரவில்லை என்று கூறி சிலகாலத்திற்கு கேப்டனாக கும்ளேக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

=================================================================

அணியில் நிரந்தர இடம் பெறுவதற்கு டெஸ்ட் போட்டிகள் அவசியம் என்ற சூழல் இருப்பதால் 20-20 எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் டெஸ்ட் அழியவே அழியாது.

Wednesday, May 27, 2009

மனசாட்சியுடன் முதலிரவுக்குள் செல்லப் போகிறீர்களா?

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிரவு என்பது மிக முக்கிய நிகழ்வு. அதில் உள்ள எதிர்பார்ப்புகளும் பயங்களும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் பொங்கி விழுந்து தாவிக் குதித்து முட்டி விளையாடி அனைத்துவித உணர்வுகளையும் கொண்டுவந்து விடும்.

இந்தப் படக்காட்சியில் பாருங்கள். ஒருவர் தனது மனசாட்சியியுடன் முதலிரவு அறைக்குள் செல்கிறார். அந்த சூழலில் மனசாட்சி எழுப்பும் கேள்விகள் அதற்கு மனசாட்சிக்குள் மனசாட்சி சொல்லும் பதில்கள்.\

பார்க்கத்தான் காமடியா இருக்கும். ஆனால் கேள்விகள் படு விவரமாய்தான் இருக்கும்.
பாருங்கள்,கேள்விகளையும் பதில்களையும் கேட்டு மகிழுங்கள்



Tuesday, May 26, 2009

வேட்டைக்காரச் சாமி

மலைக் கிராமத்தைச் சேர்ந்த பதின்ம வயதைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு பேருந்துக் கட்டணம் செலுத்த வழியில்லாத அவர்களது பெற்றோர்கள் அவர்களைப் பள்ளியிலிருந்து நிறுத்த முடிவெடுக்கிறார்கள். கல்வியில் தனியாத ஆர்வம் உள்ள் அந்த மாணவர்கள் பாதிநாள் வேலைக்குச் செல்கிறார்கள். பள்ளியில் விடுப்பு எடுப்பதை கண்டிப்பதால் பள்ளியில் அவர்களை நிறுத்த முடிவெடுக்கிறார்கள்.


இந்த சூழலில் அந்த ஊர் பெரிய மனிதர்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அருகிலுள்ள நகருக்கு சில மாணவர்களை அனுப்பிப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே..

வாரம் ஒரு முறை அந்த மாணவர்களைச் சந்திக்க யாராவது போய் அவர்களுக்குச் சென்று செலவுக்குப் பணம் தரச் சொல்கிறார்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி.... அப்படியே ஒரு பார்சலை அங்குள்ள ஒரு மளிகைக் கடையில் கொடுத்து வரச் சொல்கிறார்கள். மாணவர்கள் படிக்கும் ஆசையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொள்கிறது, அவர்களிடம் கொடுத்த பார்சலில் கஞ்சா இருப்பதாகக் கூறி கைது செய்கிறார்கள்.

பெரிய மனிதர்கள் கைது செய்யப் படுகிறார்கள். மாணவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று கூறி விடுதலை செய்யப் படுகிறார்கள். ஆனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக நிற்கிறது..


அப்போது ஒரு குரல்

நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..
இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.

நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.


பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது. =

எப்படிடா?

தொழிலில் தமிழ்நாட்டில் இருக்குற எல்லோரப் பத்தியும் எனக்குத் தெரியும். தவிர நம்ம பகுதியில் இந்தப் பயிர் நல்லா வளரும்.
நமக்கு இருக்குற ஒரு வாய்ப்பு இந்தச் செடிதான். இத வச்சுத்தான் நம்ம ஊர், நம்ம ஜனங்க நம்ம மக்கள் அனைவரும் முன்னேறப்போறாங்க.


நம்ம பகுதி மட்டும்தான் போலீஸ் கண்ணில தட்டுப் படாம இருக்கு. அதுனால எல்லாப் பசங்களும் படிக்க போங்க

தீர்க்கமாக சொல்லும் தமிழரசனை எல்லோரும் பயந்துக் கொண்டு பார்க்கிறார்கள்.

படிக்கறீங்க எல்லோரும் படிக்கறீங்க

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் மாணவர்கள் பிரித்து படிக்க வைக்கப் படுகிறார்கள். அனைத்துப் ப்குதிகளுக்கும் தேவையான சரக்குக்களையும் தமிழரசன் அனுப்புகிறான். அந்த மலைப் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து சிறுவர்களையும் படிக்க அனுப்புகிறான். தனது இளமைப் பருவத்தில் படிக்கச் செல்லாமல் தான் மட்டும் காட்டுக்குள் சுற்றிக் கொண்டு அனைத்துச் சிறுவர்களையும் படிக்க அனுப்பியதால் தமிழரசன்
வேட்டைக்காரச் சாமி
என்று மரியாதையுடன் அழைக்கப் படுகிறார். சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழரசனின் மாணவர்கள் படிக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் IAS, IPS உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழரசனின் மாணவர்கள் படிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவர் ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போதும் அங்கே தமிழரசன் தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார். .

தமிழரசனின் நண்பர்களுக்கு தமிழரசன் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அவன் மூலமே காட்டுவாசிகளாகத் திரிந்த தங்களை மனிதர்களாக மாற்றியவன் என்பதால் அவனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள் தமிழரசனின் மாணவ நண்பர்கள். அங்கே செல்லும் வேட்டைக்காரன் அங்குள்ள கல்லூரிகளுக்கு தான் அனுப்பும் சரக்குகள் விநியோகிக்கப் படுவதாக தெரிந்து கொள்கீறார். கடத்தல்மன்னன் மார்க் ஜீரோடாஸ்க் கின் இருப்பிடத்திற்கேச் செல்கிறார்.

நம்ம ஒப்பந்தப் படி இந்த சரக்கை மாணவர்களுக்குக் கொடுக்க கூடாது. நீங்க மீறிட்டீங்க என்கிறார்

மார்க் ஜீரோடாஸ்க்: இங்க பார் தம்பி நீ ஊருக்குப் புதுசு. வந்த வழியே திரும்ப போயிடு. இங்க நா வச்சதுதான் சட்டம்.

வேட்டைக்காரன்: நான் ஒருதடவ போனா அந்தப் பாதையை நானே மறந்திடுவேன். சின்னப் பசங்கள அழிக்கற உன்ன உன் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை இன்னும் பத்து நாட்கள்ல அழிச்சுக் காட்டுறேன்.

சவால் விட்டுவிட்டு ஸ்லோமோசனில் வேட்டைக்காரன் நடந்து வருகிறார்.


=======இது நான் எழுதி வரும் வேட்டைக்காரன் கதையின் மூன்றாம் பகுதி ====

முதல் பகுதியை வேட்டைக்காரன் இனிய துவக்கம் சுட்டி மூலமும்

இரண்டாம் பகுதியை நாசாவுக்குள் போன நம்மாளு சுட்டி மூலமும்

நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக் படித்து மகிழுங்கள்



==============================================================

கதை தொடரும்

Monday, May 25, 2009

போலியாய் ஒரு அசல்

இவை அனைத்தும் உங்கள் ரசனைக்காக.., நான்கு வெவ்வேறு நாட்களில் வெளியானது


அசல் படத்தின் கதை.

அசல்


தமிழ்திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கலத்தில் இறங்கி துவக்க விழாவில் ஒரு கலக்கு கலக்கு இருந்தார். அசலில் கதை இதோ:-

கி.பி.17ம் நூற்றாண்டில் தொடங்கிறது கதை.

வெளி நாட்டில் படிக்க போன அஜித் கப்பலிலிருந்து இறங்கி தனது நாட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வயலில் இறங்கி சுற்றிப்பர்க்கிறார்.

அப்போது வயலில் வேலை செய்பவர்:-

தம்பி யாரு.. சிவப்பா இங்கிலீசு துரை மாதிரி அழகா இருக்கீங்களே அதுதான் கேட்டேன். என்கிறார்.


அப்போது இடி மின்னல் எல்லாம் ஒலிப்பது போன்று ஒரு நிகழ்வு. அப்போது பெரிய மீசையுடன் ஒருவர் வந்து நிற்கிறார்.

தம்பி பாக்கிறதுக்குத்தான் அசலூர் காரர்மாதிரி இருப்பார். ஆனால் அசலாவே அவர்
நம்மூருதான்.

வயலில் வேலை செய்பவர்: தல நீங்களா.. அப்போ அவரு

மீசைக்காரர்:- என் தம்பீ.......லே

படிச்ச அஜித்:- அது..
(அஜித் பேசுவதை அஜித் மாதிரி படிக்கவும். ரகுவரன் மாதிரி படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.) மொத்தம் இரண்டு அஜித்.

வயலில் வேலை செய்பவர்:- அதுதான் அழகா இருக்காக..


இரண்டு பேரும் சாரட் வண்டியில் போய் கொண்டே இருக்கிறார்கள். அப்போது மாவீரன்படத்தில் ரஜினி பாடும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு ஒலிக்கிறது. இடையிடையே முத்து பிண்ணனி இசையும் வந்து கொண்டே இருக்கிறது.


தம்பி அஜித்:-அண்ணே நம்ம ஜமீன் மக்கள்ளாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கண்ணே......

அண்ணன் அஜித்:-ஆனா இந்த வெள்ளைக் காரந்தான் சரியில்லே..

நம்மல வரி கேட்கிறான்.

தம்பி அஜித:- அப்படியாண்ணே... வானம் பொழிகிறது .பூமி விளைகிறது.........(முழு வசனத்தையும் அஜித் பேசுகீறார்.)

அண்ணன் அஜித்:-இதெல்லாம் நானும் பேசிப் பார்த்திட்டேன் ஒன்னும் வேலையாகல.. வரிக்கு வட்டி வேற போடறான். அசலையே கட்ட முடியாதுங்கறேன்

கலக்டர் பொண்ணுகூட என்கூடத்தான் கப்பல்ல வந்துச்சு. நான் போயி பேசி பாக்கட்டுமா...

அண்ணன்;- அது அசலாவா கலக்டர் பொண்ணுதானே...

தம்பி;- இல்லணே.. கலெக்டரே பொண்ணுதான்னே... வரும்போது பேசிட்டு வந்தேன்.

அண்ணன்:- நான் தனியாளு இல்லேண்ணு சொன்னியா...

தம்பி:- அதச் சொல்லிட்டுத்தாண்ணே பேசவே ஆரம்பிச்சேன்...

................................................................... தொடரும்>>>>>>>>>>>>.......

==================================================================

அசல்+சுதந்திரம்+காதல் பாகம் இரண்டு

தங்கள் சமஸ்தானத்தில் வரி அதிகமாக இருப்பதால் அதைக் குறைப்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்ப்பதற்காக பெரிய தல, சின்ன தல இருவரும் கோட்டைக்கு வருகிறார்கள். இதன் முன்கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

.....................................................................................................................................................

பெண் கலெக்டராக ஒரு ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். அவர் அதிகாலை நேரத்தில் எழுந்து ஜாக்கிங் போகிறார். ஸ்கிப்பிங் மற்றும் இன்னபிற உடற்பயிற்கிகள் எல்லாம் செய்து கடைசியில் குளிக்கிறார். படத்தில் அன்றைய வெள்ளைக் கார கலெக்டர்களின் அதிகாலை வாழ்க்கைமுறை பற்றி அழகாகப் பதிவு செய்யும் முயற்சியாக இந்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதனால் யாரும் இவற்றை ஆபாசமாகக் கொள்ள வேண்டாம்.

..................................................................................................................

கோட்டைக்கு புறப்படும் பெரிய தல, சின்ன தல இருவரையும் பாராட்டி மக்கள் பாட்டுப் பாடுகிறார்கள்


எங்கள் மன்னன் நீ......
நாட்டின் மன்னன் நீ......
அரியணையின் மன்னன் நீ....
மக்கள் மன்னன் நீ.....

அமைச்சருக்கும் மன்னன் நீ...
தளபதிக்கும் மன்னன் நீ....
..................................... இளைய
.....(ஒரு இடைவெளி).......
தலைமுறைக்கும் மன்னன்நீ......


இமய மலையையும் ஆளப் பிறந்தவன் நீ.......

.................................................. பாடல் முடியும் போது குதிரையில் ஏறி கலெக்டரைப் புறப்படுகிறார்கள்.


மக்களுக்குள் பேச்சு

ஒருவர்:- நம்ம பெரிய தல, சின்னத்தலைய ரொம்ப செல்லமா வளர்த்திருக்கார், பார்த்தியா.. கப்பல்ல போயி வெளிநாட்டில் படிக்க வெச்சிருக்காரே....
மற்றொருவர்:- பெரிய தல அவரோடு பத்து வயசிலயே ஆட்சிக்கு வந்திட்டாரு. வெள்ளைக் காரங்க கிட்ட நம்ம நாடு அடிமையா இருக்கறத பார்த்து நமக்கு விடிவு காலம் வரணும்தான் வெளி நாட்டுக்கு தன்னோட தம்பிய அனுப்பி படிக்க வச்சிருக்காரு..


வயதில் முதிர்ந்த ஒருவர்:- அவங்க வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்குப்பா...

பாவம் அவங்களுக்கு ரெண்டு அம்மா..., ரெண்டு அப்பா...........


மக்கள் அதிர்ச்சியுடன்..........

ஐயோ....

என்ன ரெண்டு அப்பா, ரெண்டு அம்மாவா...............

அசிங்கமா பேசாதீங்கப்பா...

பெரிய தல பெரியராஜாவுக்கும் பெரிய ராணிக்கும் பிறந்தவர்...

சின்ன தல சின்னராஜாவுக்கும் சின்ன ராணிக்கும் பிறந்தவர்...

............................

அப்ப அவுங்கெல்லாம் எங்கேப்பா.......

வெள்ளைக் காரங்க முதன் முதலா நம்ம நாட்டுக்கு படையெடுத்து வந்தப்ப.. நம்ம பெரிய ராஜாவும் சின்னராஜாவும் எதிர்த்தாங்க.....

அவுங்களும் நம்ம தலைங்க மாதிரியே ரொம்ப அழகா சிவப்பா இருப்பாங்க ........
அவங்க ரெண்டு பேரும் ஒட்டி பிறந்தவங்க அப்படிங்கறதால பெரிய தலைக்கு வலது பக்கமும் சின்ன தலைக்கும் இடது பக்கமும் தலும்பு இருக்கும் அதை வெச்சுத்தான் கண்டு பிடிப்பாங்க யார் பெரியவங்க அப்படின்னு...

......................................................

அந்த வெள்ளைக்கார துரைக்கு ஒரு பொண்ணு
அந்தப் பொண்ணுக்கு நம்ம சின்னராஜா மேல ஒரு கண்ணு

ஒரு நாள் அந்தப் பொண்ணு சின்னராஜா வ பார்க்க வந்தப்போ

வெளிநாட்டுக் காரங்க சதின்னு பெரிய ராஜா நினைச்சு அந்தப் பொண்ணு திட்டிட்டார்..

அப்ப அந்தப் பொண்ணுக்கு யார் அசல்ன்னு தெரியாததால கோவிச்சிக்கிட்டு இங்கிலாந்துக்கே போயிரிச்சு.....

கொஞ்ச நாள் கழிச்சு திரும்பி வந்து

இந்தா உங்கொழந்தைன்னு சின்ன ராஜாவ தேடி வந்து கொடுத்தப்போ...

காதல்பிரிவுல சின்னராஜா செத்து போயிருந்தாரு......

உண்மையான காதலர்களப் பிரிச்சிட்டோமேன்னு பெரிய ராஜாவும் தேசாந்திரம் போயிட்டாரு. அப்ப இருந்து நம்ம பெரிய தலதான் நமக்கெல்லாம் மன்னரா இருந்து ஆட்சி செய்துட்டு இருக்காங்க.....................

இப்ப நம்ம சின்னதலயும் வந்து விட்டதால் வெள்ளைக்காரங்கல திரும்பவும் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்க...
..........................................................................................


வெள்ளையர்களின் கோட்டைக்குள் பெரிய தலயும் சின்னதலயும் நுழைகிறார்கள்.

கப்பம் கட்டும் மன்னர்கள் என்பதால் அவர்களை வெள்ளையர்கள் உள்ளே விடுகிறார்கள்.

காத்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் போது ஒரு வெள்ளைக்கார கிழவி வருகிறார்..

நீங்கதான் பெரிய தலயும் சின்னத்தலயுமா........... என்று கேட்கிறார்...

பெரிய தலயும் சின்னதலயும் புரியாமல் ஆமாமென்று தலையை ஆட்டுகிறார்கள்.

நாந்தாப்பா உங்க வெள்ளைக்கார பாட்டி.

உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்லத்தான் நான் உயிரோட இருக்கேன்..

உங்க அப்பா பெரிய ராஜா துறவறம் போகவில்லை. சின்ன ராஜா சாகவும் இல்லை.. இருவரையும் கைது செய்து சிறையில்தான் வைத்து இருக்கிறார்கள்..

உயிருடன் இருக்கிறார்களா...........................

கைது செய்தவர்கள் யார்?

பெரிய தலயும் சின்ன தலயும் பொங்கி எழுகிறார்கள்.

என் மகன் தான்.. அவன் தான் இப்போதைய கலெக்டரின் தந்தை........ என்று சொல்லிவிட்டு மேலே பார்க்கிறார். வெள்ளைக்கார பாட்டி.

மேலிருந்து கலெக்டர் இறங்கி வந்து கொண்டிருக்கிறார்.

.........................தொடரும்.................. தொடரும்...............தொடரும்.........................

அசல்- பேச்சுவார்த்தை- பாகம்-3

முன்கதை:-அந்நியனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் தங்கள் சமஸ்தானத்தின் விடுதலைக்காக போராடுகிறார்கள் பெரிய தலயும் சின்ன தலயும்.... தங்கள் நாட்டு மக்களின் நிலை பற்றி ஆங்கிலேய கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள். வந்த இடத்தில் தங்கள் பெற்றோர் உயிருடன் இருப்பதை தங்கள் ஆங்கிலேயப் பாட்டிமூலம் தெரிந்து கொள்கின்றனர். இனி...........

.....................................................................................................................................

முதல் பகுதி அசல் படத்தின் கதை.

இரண்டாம் பகுதி அசல்+சுதந்திரம்+காதல் இங்கேயும் உள்ளது.

.......................................................................................................................................

கலெக்டர் அவர்கள் மாடியில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது கீழிருந்து மேலாக காற்று அடிக்கிறது. அவரது கவுனும் பறக்கிறது. இந்தக் காட்சியை ஓவியமாக வரைகிறார். சின்ன தல.. கீழிறங்கி வந்த உடன் கலெக்டரிடம் அந்த ஓவியத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். கலெக்டர் மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சின்னத்தலையின் ஓவியத்திறமையைப் பாராட்டுகிறார். ( சில நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்துதான் மர்லின் மன்றோ தனது மாடலிங் போஸ்களை கொடுத்ததாக பேசிக் கொள்கிறார்கள்.)


கப்பலில் இருவரும் வரும்போதே ஓவியம் வரைவது, இதுவும் இவ்வ்ளவு அழகாக ஓவியம் வரைவது தெரிந்திருந்தால் அப்போது டைட்டானிக் போன்று நாமும் பல காலத்தால் அழியாத சித்திரங்களை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்கிறார்.

.............................................................................................................

பெரிய தல தாங்கள் வந்த காரணத்தைச் சொல்கிறார். தங்கள் நாட்டு மக்களின் வறுமை நிலைகளை நாத்தத்தளிக்க உள்ளம் உருக எடுத்துச் சொல்கிறார். ஏற்கன்வே சின்னத்தலையின் பரிசில் மயங்கி இருக்கும் கலெக்டர் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

சிலமாதங்களுக்கு முன் கூட உங்கள் அமைச்சர் இதற்கு முன் இருந்த கலெக்டரிடம் பேசினார்கள் அல்லவா.. என்றார் கலெக்டர்.

ஆமாங்க அம்மா.., ஆனா... இது பெரிய தல..

உங்க ஆளுங்க தான் நாங்க சொன்ன எந்த தீர்வுக்கும் ஒத்து வரவில்லையே என்ன செய்வது? இது கலெக்டர்.

அம்மா.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க....
.......................கொசுவர்த்தி சுழல........ பழங்காட்சிகள் வருகின்றன............................


தலையின் பிரதிநிதிகள்: ஐயா.. எங்கள் நாட்டில் மக்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள்

ஆங்கிலேய கலெக்டர்: கேள்விப் பட்டோம். அதற்குத்தான் நாங்கள் பல திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

தலையின் பிரதிநிதிகள்: மழையே இல்லைங்க

கலெக்டர்: ரொம்ப சரி, அதற்காகத்தான நாங்கள் கங்கையிலிருந்து உங்கள் நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வரப் போகிறோம் அதற்காக நீங்கள் ஆயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும்.

தலயின் பிரதிநிதிகள்: ஆயிரம் பவுன் தங்கமா.. ஐயா நாங்க வரிக்கு வட்டி கூட கட்டமுடியாது அப்படின்னு சொல்ல வந்திருக்கோமுங்க..

கலெக்டர்: எங்களுக்குத்தெரியும். நாங்கள் வட்டியாகக் கேட்கவில்லை. தண்ணீர் கொண்டுவர ஆகும் செலவுகளைக் கேட்கிறோம்.

பிரதிநிதிகள்: ஐயா, கால்நடைகள் எல்லாம் சரியான உண்வில்லாமல் சக்தி இழந்து இருக்கின்றன. விறகு விற்கக் கூட நாங்கள் கால்நடைகளில் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.

கலெக்டர்: கவலை வேண்டாம் மக்களே. நாங்கள் ரெயில் பாலம் போடுகிறோம் அதற்கு ஒரு இரண்டாயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும்... உங்கள் மக்கள் ரயி மூலம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்

பிரதிநிதிகள்: ஐயா எங்கள் மக்கள் விவசாயம் செய்யக் கூட வலிமை குறைந்து காணப் படுகிறார்கள். நாங்கள் எப்படி?

கலெக்டர்: கவலையே வேண்டாம். நாங்கள் அதற்கும் ஆட்கள் அனுப்புகிறோம். உங்களுக்கு மூன்று வேளை உணவு தரப் படும். குடியிருக்க குடிசைகள், அதுவும் விவசாய நிலத்தில் இல்லாமல் தனியே குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப் படும். உங்களுக்கு உண்வு, உறைவிடம் இரண்டும் தருகிறோம். நாங்கல் அனுப்பும் ஆட்களுக்கு நீங்கள் வேலைப் போட்டு கொடுத்தால் போதும். விவசாய நிலத்திற்கு நீங்கள் வேலை செய்யும் போது வந்தால் போதும். அதில் ஏதும் நஷ்டம் வந்தால் கூட அது உங்களை சேராது.

பிரதிநிதிகள்; ஐயா, அப்ப நிலம் .................

கலெக்டர்: கம்பனிக்குத்தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்

பிரதிநிதிகள்:( கோபத்துடன்) நாங்கள் வருகிறோம்...

கலெக்டர்: போய் உங்கள் தலைவருடன் கலந்தாலோசித்துவிட்டு வந்து சொல்லுங்கள்.

....................................................................................................


பெரிய தல: இப்ப சொல்லுங்கம்மா... நாங்கள் எப்படி ஒத்துக் கொள்ளமுடியும் அம்மா...?


பெரிய தலை சொல்லிக் கொண்டிருக்கும் போது...................


.................................................................தொடரும்....................................................

அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)

முன்கதை சுருக்கம்:-மர்லின் மன்றோ போன்ற போசில் வெள்ளைக்கார கலெக்டர் பெண்மனியை படம்வரைந்து கொடுத்து அவர் மனதில் இடம் பிடிக்கிறார் சின்ன தல. நாட்டின் வறுமையும், வறட்சியையும் பற்றி கலெக்டரிடன் எடுத்துக் கூறுகிறார் பெரிய தல.

==============================

பெரிய தல, சின்ன தல பற்றி விரிவாகப் படிக்க

முதல் பகுதி,

இரண்டாம் ப்குதி,

மூன்றாம் பகுதியை சொடுக்கி படியுங்கள்

====================================

பெரிய தல சொல்லிக் கொண்டிருக்கும் போதே சின்ன தலயின் கண்களும் வெள்ளை அதிகாரியின் கண்களும் ஒன்றையொன்று கலக்கின்றன. அங்கே சப்தம் இல்லாத ஒரு யுத்தம் நடக்கிறது.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் அரசின் பார்வையாளராக பெண்கலெக்டரின் தந்தையும் முன்னாள் கலெக்டரும் வந்து சேருகிறார்.

அவர் சின்ன, பெரிய தல களைப் பார்த்து அதிர்கிறார்.

இந்த பையன் இவ்வளவு சிவப்பாக இருக்கிறானே...

உடனே வெள்ளைக்காரப் பாட்டி வந்து பெரிய தலக்கும் சின்னத்தலக்கும் உள்ள உறவு பற்றி சொல்கிறார். அவருக்கும் தலைகளுக்கும் உள்ள உறவு பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்.)
அதே நேரத்தில் அவர்களது தந்தைகள் பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்)

வெள்ளைக்காரர்களால் தங்கள் தந்தையர் இருவரும் அடிமைப் பட்டு இருப்பதை அறிந்த சின்ன தல குமுறுகிறார்.

பெரிய தல:- நம்ம அப்பாக்கள், அம்மாக்கள் மட்டுமல்ல தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, மாமன், மாமன் மகன் அத்தை, அத்தை மகன், மகள், பெரியப்பாவுக்கு பெண்கொடுத்தோர், பெண் எடுத்தோர், சித்தப்பாவுக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், அப்பப்பா, அப்பம்மா, அம்மாப்பா, அம்மம்மா, வருவோர், போவொர், வருவதைப் பார்ப்போர், பார்க்காதோர் எல்லோரையும் இந்த வெள்ளையர்கள் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்களை உடனே இவர்களை கைது செய்ய வேண்டும்

சின்ன தல:- அண்ணே விடுதலை செய்ய வேண்டும்.

வெள்ளைக்காரப் பாட்டி:- பேரப் பிள்ளைகளா.. வெள்ளைக்கார ராஜா ஒரு போட்டி வெச்சிருக்கார். அச்சு அசலா யார் ஜெயிச்சாலும் அவர்கள் கேட்கும் பரிசைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். வடக்கே நடந்த போட்டியில் கூட கிரிக்கெட் போட்டியில் ஜெயித்து ஒரு நாடு சுதந்திரம் வாங்கியிருக்கிறார்கள்.

பெண்கலெக்டர்( சின்ன தலயின் ஆள்தான்):- உங்களுக்கு கார் பந்தயம்.

மேலிட பார்வையாளர்:- ஹா,,,,, ஹா,,,, இன்னும் மாட்டுவண்டிக்கே டயர் வைக்காத பசங்க....... இவங்களாவது கார் ஓட்டுவதாவது... (சொல்லிக் கொண்டிருக்கும் போதே...)

சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.

அதிர்ச்சியில் வெள்ளைக்காரர்களின் கூடாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் உறைந்து போகின்றனர்.

பெரிய தல:- தம்பி உன்ன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவச்சது வீண்போகலடா..... (புதிதாகப் படிப்பவர்கள் இங்கே சுட்டவும்)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

படத்தின் முக்கிய காட்சியாக கார்பந்தயம் நடைப்பெறுகிறது. அந்தக் காலத்து கார்களைப் பயன்படுத்தி போட்டி நடக்கிறது. சின்னத்தல ஒரு பழைய காரை சைக்கிள் பெடலை சேர்த்துவைத்து ஒரு புதிய தொழில்நுட்பத்தில் வண்டி ஓட்டுகிறார். அவரது கார் சுலபமாக இமயமலை பகுதிகளைச் சுற்றி வந்து வெற்றிவாகை சூடுகிறது.

அடுத்ததுதான் பிரச்சனையே....

மேலிட பார்வையாளர்கள் தல உபயோகப் படுத்தியது காரே இல்லை என்று சொல்கிறார்கள்.

அப்போது வெள்ளைக்காரப் பட்டி ஒரு பழம்பெரும் புத்தகத்தை கொண்டுவருகிறார். அந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்தது. அதில் கூறியுள்ள இலக்கணப் படி சின்ன தல ஓட்டிவந்தது கார்தான் என்பதை ஊருக்கு உணர்த்துகிறார்.
=====================================

கடைசியில் சின்ன தல பெரிய தல ஆகியோரின் நாடும் நாட்டு மக்களும் அவர்களின் பெற்றோரும் விடுதலை செய்யப் படுகிறார்கள்.

ஷாரூக்கின் மகிழ்ச்சி மற்றும் தவறியஆப்பு

ஒரு வழியாக ஐ.பி.எல் போட்டிகள் முடிவடைந்து விட்டன. முடிவுகள் ஷாரூக் கானுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்ற ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி இந்த ஆண்டு வெற்றிக் கோப்பையை வாங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த அணிகள்தான் இந்த ஆண்டு இறுதி போட்டியில் பங்கேற்றன. (இந்த ஹைதரபாத், கொல்கத்தா போன்ற வார்த்தைகள் தேவையில்லாதவை என்று நினைக்கிறேன்.)


ஷாருக்கின் அணி கடைசிக் கட்டத்தில் சென்னை துரத்திப் பிடி(அடி)த்ததில் தாங்களும் சிறந்த அணிதான் என்பதை மீண்டும் காட்டி விட்டனர். செண்டிமெண்ட்டாக அடுத்த ஆண்டு வெற்றிபெறும் வாய்ப்பு வேறு இருக்கிறது. ஷாரூக் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார் என்று நினைக்கிறேன்.

=================================================================

டெக்கான் அணியின் பயிற்சியாளர் லேஹ்மன். உலகக் கோப்பை காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பல வீரர்களும் பெரிய பயிற்சியாளராக வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வெற்றி பெற்ற அணியின் பயிற்சியாளர்களுக்கு கொட்டிக் கொடுப்பதைவிட விளையாட்டுவீரர்களுக்கு பயிற்சியாளராக ஒரு பதவி மாற்றம் அல்லது கூடுதல் பொறுப்பு கொடுக்கலாம். இந்தியாவின் ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டில் ஆகியோர் ஏற்கனவே அதை நிரூபித்து இருக்கிறார்கள்.


உள்ளூரில் கூட பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்திய அணி வெற்றிப் பாதையை நோக்கித் திரும்பிய காலகட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உள்நாட்டுக் காரர்கள்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

============================================================

விஜய் மல்லையா அணியின் முதல் ஆட்டம் முடிந்த போது வெற்றிக் காரண்மான கும்ளேவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப் படவில்லை என்று புலம்பி ஒரு இடுகை(சுட்டி) போட்டிருந்தோம். இந்த இறுதி ஆட்டத்தில் வெற்றிக் கிடைக்காவிட்டாலும் ஆட்டநாயகன் விருது கொடுத்துவிட்டார்கள். கிரிக்கெட் உலகின் எம்.ஜி.ஆர். கும்ளே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இறுந்திருக்கும்.

===============================================================

இந்த ஐ.பி. எல் போட்டிகளால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மாற்றங்கள் இந்தச் சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ளது

=================================================================


கடைசியில் ஐ.பி.எல் போட்டிகளின் மிக முக்கியமான பரிசினையும் அறிவித்திருக்கிறார்கள். 35 வயதான டுனே கொசாட்ஸ் மிஸ்.பாலிவுட்டாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த விருதும் ஐ.பி.எல்லின் ஒரு பகுதிதான். இவருக்கு ஷாருக்கின் நாயகி வாய்ப்பு வழங்கப் படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே நொந்து போயிருக்கும் ஷாருக் கானுக்கு நெருக்குதல் கொடுக்காமல் இருக்கும் பொருட்டோ என்னமோ இந்திப் பட வாய்ப்பு வழங்கப் படும் (நாயகி என்ற உறுதியெல்லாம் கிடையாது ) என்றிருக்கிறார்கள். இளம் சிட்டுகள் சிறகடித்துப் பற்க்கும் இந்திப் பட உலகில் ஐஸ், ஷில்பா போன்றவர்களைவிட வயதான பேரிளம் பெண் நாயகியாக வருகிறார். ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.

Sunday, May 24, 2009

கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு (தொடர் பதிவில் எனது பங்கு)

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பெயரிலேயே முழுவிவரங்களும் அடங்கி யிருக்கிறது என்று நினைக்கிறேன். SURE +ஷ் சேரும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்தார்போல் ஒரு உணர்வு.

நிறைய சுரேஷ் எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் நமது இன்னொரு அடையாளமான ஊரையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சாமிக்கு விட்டுவிடுகிறேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கண்டிப்பாக.. அதை வெச்சுத்தானே தல பிழைப்பு ஓடுது

4.பிடித்த மதிய உணவு என்ன?

பிடிக்காத உணவு என்று எதுவும் கிடையாது. பாகுபாடு இல்லாமல் புகுந்து விளையாடுவோம் தல..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

வேறு யாருடனாவது என்று கேட்கிறீர்களே தல

ஏதாவது உள்குத்து இருக்குமோ

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நல்ல ரசனையான கேள்வி. பிறவிப் பெருங்கடலில் வாழ்க்கை அருவியில் மகிழ்ச்சியாக குளிக்க எப்போதுமே ஆசைதான்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடல்மொழி. நம்மிடம் எப்படி அணுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டிவிடும். நாற்காலியில் அமர்ந்ததும் மேசையில் கையூன்றிப் பேசுபவர்களையும், காலில் விழுவதுபோல் பேசுபவர்களையும் என்றுமே நான் நம்புவதில்லை. சுயமரியாதை இல்லாதவன் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிக்காத விசயங்களை உடனே கலைந்துவிடுவது பிடித்த விசயம். அப்படிப்பட்ட விசயங்கள் தினமும் கண்டுபிடிக்கப் படும் அளவு நிறைந்து இருப்பது பிடிக்காத விசயம்தான் என்றாலும் ஒரு வகையில் பிடித்த விசயந்தான்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அடுத்த வேளை சாப்பாட்டினைக் கருத்தில் கொண்டு இந்த கேள்வியையும் சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

கடவுள்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெண்ணிற வேட்டியோடு கூடிய வீட்டில் அணியும் ஆடைத் தொகுப்பு


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணினியைப் பார்த்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வர்ணங்கள் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை. தனக்குப் பிடித்த வர்ணமாக மாற நமது வர்ணாசிரமம் அணுமதிக்காது தல. அது பேனாவுக்கும் பொருந்தும். பெருமாளுக்கும் பொருந்தும்

14.பிடித்த மணம்?

தமிழ் மணம் அப்படின்னு சொல்லிருவோம் தல,


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அவர்களின் படைப்புகள் முழுவதையும் நீங்கள் முழுவதும் படிக்க வேண்டும். என்பதே..

1.இவர் ஒரு பிரபல நடிகர் என்பது என் எண்ணம்
http://kadaikutti.blogspot.com/
2.இவர் ஓர் இலக்கிய கணக்கர் காஞ்சித் தலைவன்
3 இவர் ஒரு பலசாலிhttp://tucklasssu.blogspot.com


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

ஒரு கொசுவின் கதை

17. பிடித்த விளையாட்டு?

வார்த்தை விளையாட்டு


18.கண்ணாடி அணிபவரா?

ரஜினி மாதிரி தோன்ற வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் அணிந்ததுண்டு, இப்போது அப்படியொரு எண்ணம் தோன்றுவதே இல்லை. அதனால் அணிவதும் இல்லை


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நாடோடிமன்னன் மாதியான படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததி



21.பிடித்த பருவ காலம் எது?

மாணவப் பருவம்தான்


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நல்ல கேள்வி. உண்மையில் பதில் இல்லை.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா.., வலைப்பூவின் வார்ப்புருவையே அடிக்கடி மாற்றுபவன்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பதால் எல்லாச் சப்தங்களும் எனக்குப் பிடித்தவையே

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சுற்றுலாக்களை விட்டுவிட்டுப் பார்த்தால் சிங்காரச் சென்னைதான் நான் சென்ற அதிக பட்ச தூரம்.

நம்பினால் நம்புங்கள். நான் கல்லூரி படிப்புக்காக மட்டுமே வெளியூரில் சில காலம் தங்கியிருக்கிறேன். மற்றபடி பிறந்தது வளர்ந்தது, படித்தது, வேலை அமைந்தது, பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பது எல்லாம் இதே கிராமத்தைச் சுற்றியே..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித்திறமை. இந்த வலைப்பூ பூராவும் அள்ளித்தெளித்து இருக்கிறேனே தல..,

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

விதண்டாவாதம் என்று தெரிந்தபின்னரும் தொடர்ச்சியாக செய்யப் படும் வாதங்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கடவுள் என்று சொல்லப் படும் அனைத்து உருவகங்கள் தொடர்புடைய கதைகளிலேயே பல முரண்கள் இருக்கும் போது நமக்குள் இருக்காதா தல..

அதனால் சாத்தான் என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் கடவுள்தன்மைதான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எங்கள் கல்லூரியில் இருக்கும் டென்னிஸ் மைதானம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. அவ்வளவு ஃப்ரஷ்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

செய்து கொண்டிருக்கும் ஒரு காரியம் வலைப்பூ எழுதுவது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

தவிர்க்க முடியாத தருணங்களையும் அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள் தல..

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்களே அப்படி..

=========================================================

மீண்டும் அழைத்துள்ள முரளிக்கண்ணன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்



Friday, May 22, 2009

கருத்துக் கணிப்பின் நம்பகம் இன்று இரவு தெரிந்துவிடும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0gXWc9dEQ_pLM_-A5EMt3M31giCtnNLzhI9nk3833tNzoMykF0mqude-5j5beZyzcgPzr0lzTH2jxUKY4UZSlgARBkMzGVxJ-ZPV8pq-WoityzU9w2-h379GLrZCC0Wxi_GM9O_CbEJw/s320/9.JPG

http://4.bp.blogspot.com/_1yEuKf19r_w/R2U87WmPQkI/AAAAAAAAAVo/MSOihTv7dr8/s400/billa-03.jpg

I P L ன் அடுத்த கட்டம்.

ஐ. பி. எல் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத சுரங்கம்.

எதிர்பார்த்தபடியே எதிர்பாராத நிகழ்வுகள்



பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கடைசி நாள் ஆட்டத்தின் போது ஆறு அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்ததும் கைமாறும் எனக் கருதப் படும் அணிகள் சில அட்டகாசமான ஆட்டங்களைக் கொடுத்ததும் நனது கருத்துக் கணிப்பு ஆர்வத்தை தூண்டி விட்டதால் அரையிறுதி ஆட்டங்களைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு போட்டுவிடலாம். ஏற்கனவே சொன்னது போல ஒரு ஆட்டம் பரபரப்பாகவும் ஒரு ஆட்டம் படுபரபரப்பாகவும் ஒரு ஆட்டம் ஒருபக்கம் சாய்ந்தும் தான் அமையப் போகிறது.

டேர்டெவில்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆட்டம் பர பரப்பாக அமையும்.

அதற்கு எதிர்பார்க்கப் படும் காரணங்கள் டெ, டே அடுத்தடுத்த எழுத்துக்களாக இருப்பதும் ஆங்கில எழுத்துக்களில் ஒரே துவக்கத்தையும் கொடுப்பதும் கடைசியில் ஸ் என்று முடிவதும்

அடுத்து சென்னை சூப்பர் கிங் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஒரு பக்கமானதாக அமையும். இரண்டாவதாக மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஓவர்கள்வரை ஒரு பரபரப்பாக இருந்து பின்னர் சட்டென்று முடிந்துவிடும். இதற்கு நான் கூறும் காரணம். சில நேரங்களில் கிங் களுக்கும் சேலஞ்ச் களுக்குமான உறவு பெறும்பாலும் பேச்சுவார்த்தைகளில்தான் முடியும் என்ற பாரம்பரிய தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது.

=============================================================

இந்தக் கருத்துக் கணிப்பு அறிவியல் முறைப் படி ஒரு நாளின் ஆரம்பத்தில் மற்றும் சாயங்கால நேரங்களில் நடத்தப் பட்டது.

கிரிக்கெட் விளையாட மிக முக்கிய நிகழ்வான காசு சுண்டுதலை அடைப்படையாகக் கொண்டது.

கிரிக்கெட் பற்றி பல்லாயிரக்காண கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட முக்கிய நபர்களின் ஆலோசனை இங்கே கருத்தில் கொள்ளப் பட்டிருக்கிறது.


==============================================================

Thursday, May 21, 2009

சுமித்ராவின் சரித்திரம் பக்கம் 5 ( a love lettttter story )

சுமித்ரா-சுமன் -உஷா விஷங்கள் அவ்வப்போது குழப்பம் ஏற்படுத்திக் கொண்டேதான் இருந்தாலும் அதைவிட பெரிய பெரிய பிரச்சனைகள் எங்களுக்கு இருந்தன. கல்லூரியில் எங்களுக்கான அடையாளம் உருவாகிக் கொண்டிருந்த காலம். சிலர் ஹீரோக்களாகவும், சிலர் ஆங்கிலேயர்களாகவும்,சிலர் மகளிர் காவலராகவும் உருவெடுத்துக் கொண்டிருந்தனர். சில அறிவுஜீவி மாணவர்கள் கூட அழகுணர்ச்சி மிளிரும் வண்ணம் வலம்வரத் தொடங்கியிருந்தனர்.

இந்தச் சூழலில்தான் இரண்டாமாண்டும் சுற்றுலா வந்தது. முதலாமாண்டு சுற்றுலாவில் சுமன் சுமித்ரா சைக்கிள் ஓட்டிய கதையை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.

படிக்காதவர்கள்


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்து மகிழுங்கள்.

-------------------------------------------------------------------

இரண்டாம் ஆண்டு சுற்றுலா பற்றிய பேச்சுக்கள் தொடங்கிய உடனயே மாணவர்கள் அனைவரும் தயாராகத் தொடங்கினர். எங்கள் வகுப்புத் தலைவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். துணைமுதல்வரிடன் அனுமதி வாங்குவது, உடன் வரும் விரிவுரையாளர்களை தயார் செய்வது, மாணவர்கள் தங்குமிடம் ஏற்பாடு செய்வது, பேருந்து ஏற்பாடு செய்வது போன்ற பணிகள் தலைவரின் தலைமையில் வேகமாகச் செய்யப்பட்டன. ஏற்கனவே அந்த ஊர்களுக்குச் சென்ற மூத்த மாணவர்களின் உதவியும் அந்த ஊரைச் சேர்ந்த பிற மாணவர்களின் ஆலொசனையும் கவனத்தில் கொள்ளப் பட்டது.

இந்த உலா ஏற்பாடுகள் அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தபோதே பிற ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. பல மாணவியர் சுற்றுலாவிற்கு தனி உடைகள், அலங்காரப் பொருட்கள், குளிர்கண்ணாடிகள் வாங்க ஆரம்பித்திருந்தனர். மாணவர்களும் அதே போன்ற பொருட்களை மூத்த மாணவர்களிடமிருந்து கடன் வாங்க ஆரம்பித்திருந்தனர்.


இந்த சூழலில் வகுப்பில் இருந்த சில சேட்டைக் கார மாணவர்கள் ஒரு குழுவாக நடு இரவில் கால்பந்து மைதானத்தின் நடுவில் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கால்பந்து மைதானத்தில் அமர்ந்து மந்திர ஆலோசனை செய்வதில் பல வசதிகள் இருந்தன. எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரமுடியும். பேசும் விஷயங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாது.

சேட்டை1:- டூர் வருதுடா.. நாம ஏதாவது செய்யணும். அவன் அவன் பெரிய பிஸ்த் ஆயிட்டு இருக்கான்.

சேட்டை2:- ஆமாண்டா.., நம்மள காமெடியனா கூட எவளும் பாக்க மாட்டேங்கறாளுக

சேட்டை3:- ஸ்கூல்ல குஞ்சம் வைச்ச சடைப் போட்டவ எல்லாம் இன்னிக்கு ஹேர் கட்டிங் பண்ணிட்டு லொள்ளு தாங்க முடியல...

சேட்டை1:- விடுறா..., ஸ்கூல்லயே நீ கரெக்ட் பண்ணியிருக்கணும். தும்பவிட்டுட்டு வாலப் புடிக்க நெனச்சா முடியுமா...

சேட்டை4:- விடுங்கடா பழசக் கெலறி விட்டுக்கிட்டு.. ஏதாவது செய்து நாமளும் டெபாசிட் புடிக்கணும்டா

சேட்டை3:- இந்த சோடா புட்டி சோப்ரா பார்ரா.. இப்பலெல்லாம் ஜிகினா கூட கடலைப் போட்டுக்குட்டு இருக்கான். இவங்க அத்தனைப் பேருக்கும் ஹெல்மெட் போட்டு டெபாசிட்ட கலட்டுணும்டா.. ஏதாவது ஐடியா சொல்லுங்கடா

சேட்டை5:- அவன் பேர் நாம லவ் லெட்டர் கொடுத்துறலாம்டா. ஜிகினா இரி ஆயிடுவா

சேட்டை6:- நீ அப்படிச் சொல்ற..ஆனா நான் என்ன சொல்றன்னா அப்ப அதுக ரெண்டும் செட்டில் ஆயிடும் நீ மாமா ஆயிடுவ

சேட்டை7:- ஆமா ஆமா இனி இங்கிலிஷ்ல கடல போடுறத எல்லாம் கேட்க வேண்டியிருக்கும்

சேட்டை1:- அப்ப நாமலே லெட்டர் கொடுப்போம்.

சேட்டை5: ஆனா நம்ம மூஞ்சிக்கு செட்டில் ஆகாதே..

சேட்டை2:-அதைப் பத்தியெல்லாம் கவலைப் படக்கூடது

சேட்டை4:-ஆமா வள்ளுவர் கூட சொல்லியிருக்கரு. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..

சேட்டை5:-அப்ப ஓ.கே.. ஓ.கே

சேட்டை2:- யாருக்கு கொடுக்கலாம்டா நக்மாவுக்கு கொடுக்கலாம்டா.. சேட்டு ஃபிகர் செட்டில் ஆனா தேவையில்லை பாலிஸி..

சேட்டை3:- அப்ப நீயே கொடுத்துடு

சேட்டை2:- அது சரி இந்த கோவை மாநகரிலே பழம்வாங்கா பதிவிரதன் நான் மட்டும்தான். அந்த வேலை இங்க வேண்டாம்

சேட்டை6:- அப்ப நாம எல்லோரும் கொடுப்போம்.

சேட்டை3:- ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

சேட்டை1:- ஒருத்திக்கு வேண்டாம்டா எல்லோருக்கும் லெட்டர் கொடுப்போம்டா. நாம எல்லோரும் கொடுப்போம்

சேட்டை2:- சூப்பர் ஐடியா. லெட்டர் ரெடி பண்ணனும்டா

சேட்டை3:- அன்பே.. அன்புள்ள அன்பே

சேட்டை5:- இப்படியெல்லாம் எழுதினேன் வை செருப்படி விழும்

சேட்டை1:- ஹாய்.., ஐஸ்.. (ஐஸ்வர்யா) இப்படி ஆரம்பிப்போம்

சேட்டை7:- ஓப்பனிங்லயே செமயா வண்டி ஏத்தறயேடே

சேட்டை4:- நடக்கட்டும் நடக்கட்டும்.

சேட்டை3:-மேட்டருக்கு வாங்கடா......

சேட்டை2:- உலகம் ரொம்ப சிறிசு, அனாடமி புக் கிரே எழுதுனது, கைட்டன் தமிழ்காரன் இல்ல, சிவபார்வதி பாவம் ரஜினி கட்சில லதாவா சேத்திக்குவாரா மாட்டாரா இதெல்லாம் எழுதுவம்டா

சேட்டை7:- இது லவ் லெட்டர்டா

சேட்டை2:-ஆமா லட்டர் கொடுத்து செட்டில் ஆகி கல்யாணம் பண்ணிக்காமலே குழந்தை பெத்துக்கப் போறாரு. எழுதுவம்டா.., நாம எழுதறதுதான் லவ் லட்டர். அது அவள் படிச்சாகணும். அது அவ தலையெழுத்து

சேட்டை5:- ஏண்டா பிரச்சனை ஏதும் வந்தறாதே..,

சேட்டை1:- அதெல்லாம் வராதுடா.., அப்படியே வந்தாலும் பெண்களைக் கரெக்ட் பண்றதுக்குண்ணே ஜெமினிகணேசனை கடவுள் நம்மளோட படிக்க அனுப்பிச்சிருக்காரே... கரெக்ட் பன்ற பொறுப்ப ஜெமினி பார்த்துக்குவார்

சேட்டை4:-யார் எழுதறது

சேட்டை3:-நம்ம 11னோட கையெழுத்து முத்துமுத்தா இருக்கும் அவன எழுதச் சொல்லுவோம்.

சேட்டை11:- மக்களே.. மக்களூக்கு மக்களே நீங்களெல்லாம் நாளைக்கு அடிவாங்குனீங்கன்னா, உங்க வீட்டுக்கு இலவசமா நான் தந்தி யடிக்கறேன். த்யவுசெய்து என்ன விட்டுடுங்க

சேட்டை3:- எனக்குவேற தமிழ் ஒழுங்கா எழுத வராது. இல்லைன்னா நானே எழுதிடுவேன்.

சேட்டை8:-குஞ்சம் வைக்கற பொண்ணுகளோட படிச்சவனுக்கு தமிழ் எழுத வராதாம். யாருக்கட்ட டீ காது குத்தற

சேட்டை7:- யூ ஒன்லி ரைட்டிங்.. வீ ஆல் ரைடிங்

சேட்டை6:- குட் மார்னிங் ஆப்பீசர். இதுகெல்லாம் என்ன அர்த்தம்?

சேட்டை1:- நாளைக்குப் போறோம். ஒலிம்பிக் கார்ட்ஸ் வாங்கறோம்.

சேட்டை4:- டேய் இது பெரிய பட்ஜெட்டுடா. குறைஞ்சது 25 பேருக்கு பத்து பேரு லெட்டர் கொடுத்தாலும் 250 கொடுக்கணும்டா....

சேட்டை6:- எப்பப் பார்த்தாலும் பஞ்சப் பாட்டு பாடிட்டு விடுடா... நாளைக்குப் போய் வெள்ளைப் பேப்பர் வாங்க்கிட்டு வந்து எழுதுவோம்.

சேட்டை1:- ஒன்னு எழுதுவோம். அப்புறம் செராக்ஸ் போட்டுக்கலாம்.

சேட்டை6:- டேய் இது லவ் லெட்டர்டா....

சேட்டை9:-கலர் செராக்ஸ் போட்டுக்கலாம்டா. அப்படியே இதயம், அஜித், தேவயானி படங்களெல்லாம் போட்டுக்கலாம்டா

சேட்டை6:- சரி யார்யாருக்கு கொடுக்கலாம்.

சேட்டை1:- டேய் பப்ளிமாஸ் குல்கர்னி

சேட்டை8:- நாம கொடுக்கலாம்டா.., ஆனா 6 மட்டும் அவளுக்கு கொடுக்க வேண்டாம். அவ பார்க்கற பார்வையே செரியில்லை. இவனுக்கு செட் ஆனாலும் ஆயிடும்

சேட்டை6:- நெஜமாவாடா.., முதல்லயே சொல்லியிருக்கலாம்ல.. டேய் நான் இந்த வெளையாட்டுக்கு வரல.. நான் குல்கர்னிய பார்க்கறேன். டேய் நார்த்திடா..

சேட்டை4:-டேய் கோபி செட்டி பாளையத்தில சாணி தட்டறதுக்கு நார்த்தியெல்லாம் ஓவர்டா....


சேட்டை1:- அதெல்லாம் நீ டூர் முடிச்சிட்டு பாரு. சரி யார்யார் யார்யாருக்கு குடுக்க வேண்டாம்?

எல்லோரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய தனியே ஒரு லிஸ்ட் தயாரானது.

சேட்டை3:- டேய் பூங்காவனம், மனிஷா இவங்களுக்கு யாரும் கொடுக்க வேண்டாம். ரிஸ்க் பார்ட்டீங்க..

சேட்டை4:-அப்படியே சுவாதி, ரிதி இவங்களுக்கும் கொடுக்க வேண்டாம். அடி உறுதி யாயிடும்

இவ்வாறாக சேட்டைக்கார மாணவர்கள் தங்கள் பயணத்திற்கான தயாரிப்பை இனிதே தயாரித்து பேருந்து ஏறினார்கள்


பேருந்து முதல் நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலையில் ஏதோ ஒரு ஊரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நின்றது. மாணவர்கள் குளித்து தயாராகி சாப்பிட்ச் சென்றனர். சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கும் பூங்காவிற்கும் சென்று சற்று இளைப்பாறத்தொடங்கினர்.

சேட்டை3 வந்து சுமித்ராவிடம் கடிதம் கொடுத்தான். கடுமையான கோபத்துடன் கங்கூலி போல் பார்த்த சுமித்ரா கடிதத்தைப் படிக்காமலேயே கண்டபடி அறிவுரை வழங்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்துச் சென்ற சேட்டை7 கடிதம் கொடுத்த உடன் கடும் கோபத்திற்குள்ளான சுமித்ரா வசைமாறி பொழிய ஆரம்பித்தாள். சில நிமிட இடைவெளிகள் மற்றவர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட் கோபத்தில் மூச்சிறைக்க ஆரம்பித்தது.

சுமித்ரா தங்கியிருந்த மண்டபத்திற்குச் செல்ல மண்டபத்தின் முன் பகுதியில் கடிதத்தின் ஒருபிரதி ஒட்டப் பட்டிருந்தது. அதைப் பார்த்த சுமித்ரா மயங்கி விழுந்தாள். அவளை மயக்கம் தெளியவைத்து விட்டு நாங்கள் வந்த வேளையைப் பார்க்க ஆரம்பித்தோம். பேருந்து புறப்படும் நேரத்திற்கு பேருந்துக்குச் சென்றோம்.

அங்கு எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுமனின் மடியில் சுமித்ரா தலைவைத்துப் படுத்திருந்தாள். மயக்கம் போட்டுவிழுந்த அதிர்ச்சியில் அவள் மிகவும் சோர்ந்து இருப்பது போல் தோன்றியது.

ஏனோ முதல் ஆண்டு சுற்றுலாவின் போது சொன்ன

உன்னையும் என்னையும் தப்பா பேசுறாங்க நீ வேற சீட்டுக்குப் போ.......

என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து தொலைத்தது. அத்தோடு உஷாவோடு அவன் நெருக்கமாக நடந்துவந்ததும் மனதுக்குள் வந்தது.


========================================================
பெறுநர் என்ற இடத்தில் கடிதம் கிடைக்கப் பெறாத அனைத்து மாணவிகள் என்றும் அனுப்புனர் என்ற இடத்தில் சேட்டைகளின் பெயரையும் போட்டு அந்த இடத்தை ஒரு நகைச்சுவைப் பிரதேசமாக மாற்றி அமைத்திருந்தனர். காதல் பற்றிய ஒவ்வொருத்தர் கருத்தையும் (வாங்கிக் கட்டியதைத்தான்) அவர்களுடைய குரல்தொனியிலெயே பரிமாறிக் கோண்டு வந்தனர்.

இந்த சிறிய இடைவெளியில் சேட்டைகளில் ஒருவரான விஜய் சன்னமாக சங்கீதாவிடம் தனது மனதை பரிமாறிக் கொண்டது பிற்கால சரித்திரத்தில் தெரிய வந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி
==============================================================
தொடரும்

========================================================

டிஸ்கி:- இந்த கதை நன்கு கொதிக்கவைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டிய கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்களோடு யாரையும் தொடர்படுத்திப் பார்க்க வேண்டாம் என்று வாசகர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
=========================================================

அடுத்த பகுதி இங்கே உள்ளது.சுட்டிமூலம் படித்து மகிழுங்கள்

Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

இந்திய பாராளுமன்றத்தேர்தல் நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பத்ற்காக நடைபெற்றது. அதன் முடிவுகள் இப்போது வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ர்ப்பு இருந்திருக்கும். கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பவர்கள் போல் தேர்தல் முடிவுகள் பார்ப்பவர்கள் அங்காங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். நமது இளமைக் காலத்தில் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் முடிவுகளுக்கு நடுவே திரைப்படங்கள் போடுவார்கள். திரைப் படம் பார்த்துக் கொண்டே முடிவுகளைப் பார்ப்போம். பாராளுமன்றத் தேர்தல் என்றால் இந்திப் படங்கள் போடுவார்கள். மூன்று நாட்களுக்கு மேல் இந்திப் படத்துடன் முடிவுகள் பார்ப்போம்.

இப்போதெல்லாம் மிண்ணனு முறை. 20-20 முறை. எல்லா முடிவுகளும் அதிரடியாக வந்து விடுகின்றன. சிலருக்கு இந்த முடிவுகள் பிடித்திருக்கும். சிலருக்கு முடிவுகள் பிடித்திருக்காது. எப்படி இருந்தாலும் ஒட்டு மொத்த இந்திய மக்களில் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தளித்தவர்களில் (இவர்களில் 49-0 வர மாட்டார்கள்) அதிக வாக்குப் பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும். அதிக மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு பெற்றவர்கள் ஆட்சியும் அமைக்கிறார்கள். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தேர்தல் முடிவினால் சந்தோஷப் படுபவர்கள் மகிழ்ச்சியாகவும், தேர்தல் முடிவினால் வருத்தப் படுபவர்கள் தங்கள் மனதினைத் தேற்றிக் கொள்ளவும் இந்தப் பாடல்களைப் பாருங்கள்.




இந்தப் பாடலில் நடன அசைவுகளில் பிரபு தேவா தனி முத்திரையை உருவாக்கினாலும் அதை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை நக்மா அவர்களையும் சேரும். காமிக்ஸ்களின் தாக்கத்தில் இருந்து குமுதம் படிக்க ஆரம்பித்த காலத்தில் வந்தது. இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொடுத்த பாடல் இது. கிராபிக்ஸ் என்ற வார்த்தையை பட்டி தொட்டிகளெல்லாம் பரப்பிய பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு. ஆனால் இதில் செய்ததாகச் சொல்லப் படும் கிராபிக்ஸ் விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே படம் முழுவதும் வரும்படி விட்டலாச்சாரியா செய்து இருக்கிறார். அந்த மாமனிதரின் கையில் இது போன்ற தொழில்நுடபங்கள் கிடைத்திருக்குமெனில் உலக சினிமா இந்தியாவிலிருந்துதான் பிச்சை எடுக்க வேண்டியிருந்திருக்கும்.


பதின்ம வயதின் இறுதிக் கட்டத்தில் பார்த்த பாடல்களில் இன்னொரு பாடல். மிக மெதுவாக் மெல்லிசையை மெல்........................லிசையாக மாற்றி உருவான பாடல். புல்லாங்குழல் இசையும் கடல் நீர் கரையில் மோதுவதையும் ரசிக்கும் விகிதத்தில் கலந்து கொடுத்திருப்பார்கள். பாடல்களை என்னைப் போன்றவர்கள் பாட முயற்சித்த போது வசனமாக ஒலித்த பாடல்.

எதிர்காலம் உன்மீது பழிபேசும் கண்ணே என்ற வரிகளின் போது பூட்டப் பட்ட இரும்ப்புக் கதவின்பின்னே மனிஷா நிற்பார்.

என்வாசல் கடந்து விட்டேன் என்று மனிஷா பாடும்போது ஒரு இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வருவார்.

அவர் பாடும் இடம் முழுவதும் பச்சைப் பாசம் நிறைந்திருக்கும். நாயகனும் நாயகனும் ஒருவர்மீது ஒருவர் மிகவும் பாசமாக இருப்பதை காட்டுவதற்காக இயக்குநர் அந்த இடத்தை உபயோகப் படுத்தியதாக அப்போதே நாங்கள் பேசிக் கொண்டோம். ஒரு நங்கூரத்தில் சிக்கி மனிஷாவின் பர்தா சிக்கிக் கொள்ள அதைக் கழட்டிவிட்டுவிட்டு அரவிந்த சாமியை நோக்கி ஓடுவார். மதச் சின்னங்கள் நங்க்கூரமடித்திருந்தாலும் அதில் இருந்து பிரிந்து நாயகி செல்வதாகவும் ஓடி வருவதைப் பார்த்து புல்லரித்துப் போய் பேசிக் கொண்டிருந்ததை நினைத்தால் இன்றும் புல்லரிக்கிறது.



பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருந்தால் சுலமாக பிடித்துக் கொள்ளும் என்ற கருத்தினை வலியுறுத்தும் ஒரு பாடற்காட்சி. ஒரே அத்தியாவசியத் தேவை ஒத்த அலைவரிசை. இருவரும் ஒருவர் பார்வையில் ஒருவர் தடுமாறுவதாக பின்னர் காட்சி அமைத்திருப்பார்கள்.
அதுவும் டைட் மினி ஸ்கர்ட் போடும் பெண்ணின் சாமியாராய் போகும் கனவு எப்படி ஒரு சிதைகிறது என்பதை உணர்வு பூர்வமாக எடுத்திருப்பார்கள். அரவிந்தசாமி மாதிரி பசங்க துரத்தினாக் கூட எங்க விதி இருக்கோ அங்கதான் செட் ஆகும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைத்த நம்பிக்கை முத்திரைப் படம் இது.பிரபு தேவாவுக்கு விருதுவாங்கிக் கொடுத்த பாடல்

Thursday, May 14, 2009

யாரந்த fake ipl player ?

இந்த நிழல் மனிதரின் எழுத்துக்கள் பலராலும் ரசிக்கப் படுகின்றன். ஏறக்குறைய 7000 பின் தொடர்பவர்களுடன் வலைப்பூ போய் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப் படுகிறது. நைட் ரைடர்ஸ் அணிவீரராக அறிமுகத்தில் இப்போதைய நிலை போய் கொண்டு இருக்கிறது.

அவரே ஒரு ஓட்டளிப்பு பட்டையை ஒருவாக்கி இருக்கிறார். கேள்வி

Who is FIP?

என்பது தான் . அதில் குறிப்பிட்ட பெயர்கள் எல்லாம் குறிப்புகளில்தான் இருக்கின்றன. ஆகாஷ் சோப்ராவை சந்தேகப் பட்டுதான் அவரை வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறுகிறார்கள். அத்ற்குக் காரணம் அவர்தான் கணினியை அதிகம் உபயோகப் படுத்தும் ஆட்டக்காரராம். ஆனால் அவர் வந்த பிறகும் கூட
fake ipl player வலைப்பூ வெற்றிகரமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.


அந்த வலைப்பூவின் முன்னோடி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? சென்னைப் பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் அவர்கள்தான். லட்சுமி காந்தன் யார் கேட்பவர்களுக்கு கடைசியில் பதில் சொல்கிறேன்

அவரது முதல் இடுகையில் அவரை கடுமையான களத்தடுப்பாளராக அவரை அடையாளம் காட்டிக் கொள்கிறார். இதுவரை விளையாடாத ஆட்டக்காரராகவும் சொல்லி இருக்கிறார்.

அவர் எழுதும் ஆங்கிலம் சில நேரங்களில் அகராதியை நாடும் வகையில் அமைகிறது. நமது கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் அவ்வளவு சிறப்பாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக கங்கூலி இப்படியெல்லாம் நிழல் மறைவில் எழுதும் இயல்பு உடையவர் அல்ல. எது நடந்தாலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் இயல்புள்ளவராக அவர் எனக்குத் தெரிகிறார். கல்கத்தா அணியில் இருப்பவர்களில் மிகச் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா.. என்று தொடர்ச்சியாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் சொல்லுங்களேன்.

  • Sourav Ganguly
  • Cheteshwar Pujara
  • Ricky Ponting
  • Ishant Sharma
  • Iqbal Abdullah
  • Ashok Dinda
  • Wriddhiman Saha
  • David Hussey
  • Yashpal Singh
  • Murali Kartik
  • Brendon McCullum
  • Ajit Agarkar
  • Aakash Chopra
  • Debabrata Das
  • Moises Henriques
  • Mark Cameron
  • Angelo Mathews
  • Mashrafe Mortaza
  • Ajantha Mendis
  • Laxmi Ratan Shukla


  • Chris Gayle
  • Morne van Wyk

  • Brad Hodge

அணியின் பயிற்சியாளர் புக்கனன், மெக்கல்லம் போன்றவர்கூட ஆட்டம் முடிந்ததும் அணிக்கு டாட்டா சொல்லும் நிலையில் இருப்பதால் அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால் வாய்ப்பு குறைவுதான்.

================================================================

தமிழ்திரை யுலகின் முன்னாள் உச்ச நடிகரும், நகைச்சுவையின் நிரந்தர உச்ச நடிகரும் லட்சுமிகாந்தனை கொலைசெய்ததாக குற்றம் சாட்டப் பட்டு தண்டனை அனுபவித்திருக்கின்றனர். அவர் இந்து நேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தவர்.

=================================================================
எப்படியோ fake ipl playerன் முன்னோடியை கண்டுபிடித்துவிட்டோம். விரைவில் உண்மையான நிழல்மனிதனை கண்டுபிடித்திவிடலாம். அவரே கூட வெளிக்காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்போது நம் இடுகையின் காரணமாகவே அவர் வெளியில் வந்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

Wednesday, May 13, 2009

அஜித்தின் அரசியல் பயணம்- உண்மை நிகழ்ச்சி

ஓட்டுக்காகத்தான்

100% பதிவானது எப்படி?பூத் பற்றிய முழுவிவரம்

வழக்கமாக நம்நாட்டில் 60 சதவிகிதம் பேர்தான் பூத்திற்கு வருவார்கள். 70 சதவீதம் போர் பூத்திற்கு வந்தால் பெரிய விஷ்யம், வெகு அபூர்வமாக 90சத்வீதம் வரும். ஆனால் இந்தியாவில் நூறு சதவீதம் சாத்தியமாகி இருக்கிறது. அது பற்றிய முழுமையான செய்தித் தொகுப்பு தான் இது.

எப்படி சாத்தியமாகியது?

ஒரு பூத்தை சேர்ந்தவர்கள் வேறொரு பூத்திற்குச் சென்ற விவரம்..

பூத்திற்கு வராதவர்களை எப்படி வரவைத்தார்கள்..

வீட்டிற்கே சென்ற விதம்..

ஏற்பட்ட தடைகள்

தாண்டிய விதம்

பற்றி இங்கே எழுதியிருக்கிறார்கள், சுட்டியைப் பயன்படுத்தி படித்து மகிழுங்கள்.

சுமித்ராவின் சரித்திரம் பக்கம்- 4

ஜூனியர் மாணவியைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சுமித்ரா என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை.., அவளைப் பார்த்து வியர்த்தது உண்மையில் இன்று நினைத்தாலும் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. அப்போதுதான் இரண்டாம் ஆண்டு போயிருந்ததால் முதலாமாண்டில் அனைவரையும் பார்த்து பயப் படும் நிலமை மாறாத சூழல் இருந்ததால் சுமித்ராவைப் பார்த்து கூட பயப்பட நேர்ந்தது ஒரு நகைச்சுவைதான்.

ஜூனியர் மாணவன் மறுநாள் முழுவிவரமும் தருவதாகக் கூறினான்.

=================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்து மகிழுங்கள்.

=========================================================

மறுநாள் அன்று அந்த ஜூனியர் மாணவன் முழு பயோ டேட்டாவுடன் வந்து நின்றான். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. சீனியர் மாணவர் கேட்டார் என்று ஏறக்குறைய மிரட்டி முழு விவரங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின்னாளில்தான் தெரிந்தது சீனியர் கேட்டார் என்றே நிறைய மாணவிகளின் முழுவிவரங்களையும் வாங்கி வைத்திருக்கிறான். எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் உஷா..., அதில் கிடைத்த விவரங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுவோம்.

உஷாவிற்கும் சுமனுக்கும் உள்ள நட்பு அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

இப்போதெல்லாம் ஜூனியர் மாணவர்களிடம் மற்ற மாணவர்கள் டாப்-10 பெண்களை அடிக்கடி கேட்க ஆரம்பித்திருந்தனர். முதல் கால கட்டங்களில் டாப்-10 பட்டியலில் இல்லாத உஷா கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தாள். அதுவும் சுமன் இருக்கும் இடங்களில் இது கொஞ்சம் அதிகமாக இருந்தது. விடுதி உணவகத்தில் ஒரு மேசையில் சுமன் இருக்கும் நேரத்தில் மற்ற மேசையில் இந்தக் கேள்வி வந்தால் உஷா முதலிடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

அவள் உண்மையிலேயே சூப்பர் ஃபிகர் என்று நினைத்த மூத்த மாணவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது உடற்கூறியல் அறுவை அறை மற்றும் வகுப்பறைப் பக்கங்களில் தென்பட ஆரம்பித்தார்கள். சரமாரியாக அனைத்து மாணவர்களாலும் அவள் பெயர் உச்சரிக்கப் பட்டதால் அவளை உண்மையிலேயே ஃபிகர் என்று நினைத்துவிட்டனர்.

ஏறக்குறைய புடவை கட்டிய ரம்பாவும் மகேஷ்வரியும் கலந்த உருவம் மஞ்சள் வண்ண ரிப்பன் கட்டி முகப்பூச்சிப் பவுடர் இல்லாமல் கோட் வேறு அணிந்து 40 கிலோவில் ஒரு மங்கை. அவளை அழகி சென்று சொல்லி எல்லோரும் ஏமாந்து கொண்டிருந்தனர். அதற்குக்காரண்ம சுமந்தான் என்ற விவரம் தெரியத் தெரிய சுமன் உஷா விவகாரமும், சுமன் சுமித்ரா விவரமும் கல்லூரி முழுவதும் பரவ ஆரம்பித்தது.


கல்லூரியின் முன்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்து ஊர் திரும்பும் பெண்களிடம் சீடை, முறுக்கு போன்ற பொருட்களை கப்பமாக வாங்கும் கூட்டம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூடியிருக்கும். நாங்களும் சீனியர் ஆகிவிட்டதால் அந்த பிள்ளையார் கோவிலில் ஒரு தூணைப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் திண்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு புரையேற ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்தால் சுமன் உஷாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். நாங்கள் எங்கள் வகுப்பு மாணவிகளிடம் பேசுவதற்கு பயந்து கொண்டிருந்த போது சுமன்..., உஷாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்படியே பிள்ளையார் கோவில் தூணுக்குப் பின்னால் அப்படியே உட்கார்ந்து விட்டோம்.. சுமன் பாதுகாப்பாக உஷாவை கல்லூரி விடுதிக்கு அழைத்துச் சென்றான். கடுப்பான நாங்கள் யமகாவை எடுத்துச் சென்று ஜோடியை வழிமறித்து வழிபறியை ஆரம்பித்தோம். நாங்கள் அவளிடம் பெயர் கேட்டுவிட்டு சுமனிடம் பூவே உனக்காக படத்துக்கு போகலாமா.., உள்ளத்தை அள்ளித்தா பார்க்கலாமா என்று வெட்டியாக பேச ஆரம்பித்தோம். சுமன் நெளிந்து கொண்டிருக்கும் போதே சுமித்ரா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். வீட்டிலிருந்து விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தவள். வழியில் இருந்த கூட்டத்தைப் பார்த்து உள்ளே நுழைந்துவிட்டாள். உஷாவைப் பிரித்து விடுதிக்கு அனுப்பி விட்டு எங்களுடன் பேச ஆரம்பித்தாள்.

சுமனைப் பார்த்து என்ன நீயும் இவனுகளோட சேர்ந்துவிட்டாயா என்று கேட்டாள்.

சுமன் புரியாமல் விளிக்க இவனுக( நாங்கள்தான்) எல்லாம் ரொம்ப நாளா உஷா பின்னாடி சுத்திட்டு இருக்கானுக. நானும் ரொம்ப நாளா கவனிச்சிட்டு இருக்கேன். இன்னைக்கு நீயும் கூட்டணி அமைச்சிட்டே..

சுமன் ரொம்பவும் நல்ல பிள்ளை போல தலையாட்டிக் கொண்டிருந்தான். நாங்கள் விடுதிக்கு திரும்புவதாகச் சொன்னவுடன் சுமித்ரா கொண்டுவந்த பையிலிருந்து ஒரு பார்சலை எடுத்து சுமனிடம் கொடுத்து இது உன்க்காக என்றாள். இவனுகளுக்கும் கொஞ்சம் கொடுத்துவிடு என்று பெரிய மனத்துடன் சொன்னாள்.

பார்சலில் இருந்த பலகாரங்கள் எங்களுக்கு பாரமாய் சாப்பிடுவதற்கு முன்பே தொண்டையில் நின்றது.

===============================================================

தொடரும்......................................................

அடுத்த பகுதி

ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க?

வந்துவிட்டது.

Tuesday, May 12, 2009

சுமித்ராவின் சரித்திரம்- பக்கம்3

சுமிதராவும் சுமனும் ராசியாகி விட்டதால் அவர்களுக்கிடையேயான மெல்லிய பெயர் தெரியாத உறவை பிரித்த குற்ற உணர்ச்சி எங்களுக்கு விலகி இருந்தது. இருந்தாலும் அவர்களுக்கிடையே என்ன உறவு என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருந்தோம்.
=============================================

சுமித்ராவின் திருமணத்தன்று நடந்த நிகழ்ச்சிகளையும் பின்னோக்கிச் சென்று கதையின் துவக்கத்தினையும் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள்.

======================================================

முதலாமாண்டு சுற்றுலா முதல் முதலாமாண்டு தேர்வுவரை நடந்த கதையை தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்

=====================================================

முதலாமாண்டு முடிந்து அடுத்த ஆண்டில் நுழைந்தபொது எங்களுக்கு சுமன் சுமித்ரா விஷயம் மறந்து போயிருந்தது. சில நாட்களில் புதிய முதலாமாண்டு மாணவர்கள் வரத் தொடங்கினர். புதிய மாணவிகள் பலரும் எங்களுக்கு அழகாகத் தெரிய ஆரம்பித்திருந்தனர். ( ஒவ்வொரு ஆண்டும் அதே எண்ணம் தோன்றியது பிற்காலச் சரித்திரம்)

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் (பாடத்திட்டப்படி first senior) தலையை அறுத்து பாகங்களைக் கற்றுக் கொண்டிருந்தபோது புதிய முதலாமாண்டு மாணவர்கள் பாதத்தைக் கிளித்து நரம்புகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமன்,சுமத்ரா 10வது மேசையிலும் நான் பதினொன்றாவது மேசையிலும் இருந்தபோது ஏழாவது மேசையில் செயல்வழிக் கற்றலில் இருந்தவ நண்பன் லேசாக சைகை செய்தான். ஏதோ கொஞ்சம் புரிவது தோன்றினாலும் முழுவதும் புரியவில்லை. தலையை பக்கத்து மேசையை நோக்கித் திருப்பியதில் சுமனின் பார்வை பனிரெண்டாவது மேசையை நோக்கி பார்வையை வீசிக் கொண்டிருந்தான். பக்கத்தில் சுமித்ரா என்னவோ படித்து சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு நண்பன் கழுத்தை அறுத்து நரம்புகளையும் சதைகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஒன்றும் விழங்கவில்லை. ஒருவேளை அந்த மேசையைத் தாண்டியிருக்கும் விரிவுரையாளர்கள் ,பேராசிரியர்களின் அறையையே பார்க்கிறானோ என்றுதான் நினைத்தோம். இருந்தாலும் எங்களது கண்காணிப்பு பிரிவுக்குள் சுமன் வந்தான். அப்படியே சுமித்ராவும் எங்களது கண்காணிப்புக்குள் வந்தாள். அறுவை அறையில் நிரம்பி இருந்த மாணவர்களுக்கு மத்தியில் நாங்கள் அவர்களை கண்காணிப்பது பெறும்பாலும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

முதல் நாளில் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சுமித்ராவும் சுமனும் எங்கேயும் தனியே சந்தித்தது போல தோன்றவில்லை.

இரண்டாம் நாள் மதிய இடைவேளை நேரம் அலுவலகம் நோக்கி சுமன் சென்றுகொண்டிருட்ந்தான். அவனைப் பின் தொடர்ந்தோம். அவன் அறியாமல்..,

நேராக ஜூனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருந்த இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ராக்கிங் போன்ற விஷயங்களிலெல்லாம் ஈடுபடும் மனோவலிமை அவனுக்கு கிடையாது. அப்படியே இருந்தாலும் அவன் தனியே போவது...,


போனவன் சற்று தயங்கி நின்றான். நாங்களும் அவனுக்கு ஒரு பத்தடி தள்ளி அங்கிருக்கும் செடிகளையும் இந்தப்பக்கத்தில் உடைந்து கொண்டிருக்கும் சுவற்றுச் சுண்ணாம்பினையும் ரசிக்க ஆரம்பித்தோம்.

அப்போது அவனை நோக்கி ஒரு பெண் நடந்து வர ஆரம்பித்தாள். நாங்களும் எங்களை தாண்டிவந்த ஒரு ஜூனியர் மாணவனை மடக்கி நிறுத்தினோம். அந்தப் பெண் சுமனுடன் பேச ஆரம்பித்தாள் ஒரு ஜூனியர் மாணவி சீனியர் மாணவனுடம் பேசுவது போல் தோன்ற வில்லை. இந்தப் பூனையும் பால் குடிக்குமா? எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

எங்களிடம் சிக்கிய மாணவனிடம் விசாரித்த போது இது கடந்த ஒரு வாரமாக நடப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஊர் ஆகியவற்றை விசாரிப்பதற்கும் புதிய மாணவன் என்னை ஒன்னும் பண்ணாதீங்க சார் என்று அழ ஆரம்பித்து விட்டான். இத்தனைக்கும் அவனிடம் சுமனின் திருவிளையாடலை மட்டுமே ஒரு தகவல் சேகரிக்கும் நோக்கில் ஒரு கெஞ்சலுடனேதான் விசாரித்தோம். அதற்குள் ராக்கிங் பயத்தில் அவன் அழ ஆரம்பித்தான். பேராசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால் வம்பாகிவிடுமே என்று அவனை அனுப்பி விட்டோம்.

மறுநாள் உடல்கூறு அறுவை அரங்கிற்கு வந்த உடனே அந்த பெண்ணைத் தேடியதில் அவள் பனிரெண்டாம் மேசையில் இருந்த பிணத்தின் காலினை கத்தியை வைத்து கிழித்துக் கொண்டிருந்தாள். அப்போதே எனது மேசையில் இருந்த இளையோனிடம் அந்தப் பெண்ணைக் காட்டி விசாரிக்க ஆரம்பித்தோம். சுமன் பார்த்துவிட்டோலும் பிரச்சனைதான். யாராவது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பார்த்தாலும் தொல்லைதான் என்ற சூழ்நிலையில் நாங்கள் அவனிடம் விசாரித்தது ஏதோ முதலாமாண்டு மாணவன் முதல் நாள் வகுப்பு அறைக்குள் நுழைந்தது போல் இருந்தது.

அப்படி இப்படி பார்த்துக் கொண்டே விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் சுமித்ரா எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னையும் அந்த ஜூனியர் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தாள்.

எனக்குக் கொஞ்சம் வியர்க்க ஆரம்பித்தது.

======================================================

அடுத்த பகுதி
ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி சுட்டியை தட்டி படித்து மகிழலாம்

Monday, May 11, 2009

நாசாவுக்குள் போன நம்மாளு

முன்னெச்சரிக்கை;- இளகிய மனம் கொண்டவர்களும் கர்ப்பிணிகளும் குழந்தைகளும் இதைப் படிக்கும்பொது உரிய துணைகளுடன் படிப்பது நல்லது. படிப்பதையும் கற்பனை செய்வது என்பது மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கு முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது.

முதல் பகுதியைப் படிக்க இங்கே சுட்டுங்கள்.

====================================================

அமெரிக்க நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அ.கொ.தீ.க.வின் எச்சரிக்கை அப்படி இருந்தது. ( அது தீ.க. நம்மூர் அரசியல் கட்சி அல்ல). நாசா மையத்தை ஜூலை-29ம்தேதி கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே நாசா மையம் விண்வெளியில் நிறுவியிருந்த செயற்கைச் சூரியன் இப்போது தான் பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் அந்த அறிவிப்பு வாஷிங்டன் நகரத்தையே தூங்க விடாமல் செய்திருந்தது.

இந்த சூழலில் நாசா விஞ்ஞானிகள் போர்வையில் சிலதீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதாகவும் தொலைக்காட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்துக் கொண்டிருந்தனர். அதற்கு ஆதாரமாக செயற்கைச் சூரியனின் பிளேடுகள் இடம் மாறி இருப்பதை ஒரு தொலைக்காட்சியினரும், அந்த பிளேடுகளின் மூலம் ஒட்டு மொத்த வெப்பத்தையும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செலுத்தி அந்த பகுதியையே அழிக்க முடியும் என்று இன்னொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டு செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நாஸாவின் கதவுகள் அடைக்கப் பட்டு உள்ளே யாரும் புகாத சூழல் ஏற்பட்டுவிட்டது.


வழக்கம்போல் பிரச்சனை வெளியே தெரிந்த உடனே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமரிக்க அதிபர், வழ்க்கம் போல் பெரிய சைஸ் கம்ப்யூட்டர் முன்னால் வந்து நின்று கொண்டு மனித இனத்தை காப்பாற்றுவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது நாஸாவின் உள்ளே இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை வெளியே இருந்த விஞ்ஞானிகள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உள்ளே விஞ்ஞானிகளும், பயங்கரவாதிகளும் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது. அமரிக்க தொலைக்காட்சிகள் அனைத்து நிகழ்ச்சிகளையும் உயிரோட்டத்துடன் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தனர். அமெரிக்காவின் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளும் வீரர்களும் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது
!
!
!
!
!

நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.

மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...



ஹண்ட்டர்..,

அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?

உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.

நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.

எங்க ராணுவம் உள்ள போகாத எடத்துக்கு நீ எப்படி போன..,

காத்து புகாத எடத்துல கூட இந்த ஹண்ட்டர் போயிடுவான்..


இப்ப ஃபோன வைக்கீறீங்களாண்ணா.....

சொல்லிவிட்டு கையில் ஒரு கைக்குட்டையுடன் ஹண்ட்டர் உள்ளே நுழைகிறார்.


ஹண்ட்டர் போன பாதையில் பிந்தொடர்ந்து நாஸாவுக்குள் நுழைய ராணுவம் முயற்சி செய்கிறது. பிரச்சனை மிகவும் தீவிரமாக இருப்பதால் அமரிக்க அதிபரே ராணுவ சீருடையணிந்து ராணுவத்திற்கு தலமையேற்று உள்ளே வர முயற்சிக்கிறார். ஏற்கனவே கண்காணிப்பு கேமிராவுடன் அந்தப் பகுதியை குறித்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.

ஆனால் ஹண்ட்டர் போன பாதையை பின் தொடர முடியவில்லை.

அப்போது ராணுவத்தில் இருக்கும் விவேக் சொல்கிறார்.
அவன் ஒரு முறை போனான்னா
அதை அவனே மறந்திடுவான்.
நாம எப்படி ஃபாலோ பண்றது?


மறுபடியும் எல்லோரும் பதட்டத்துடன் நடந்து கொண்டே தொலைக்காட்சியைப் பார்க்க தொடருகின்றனர்.

உள்ளே போய் கொண்டிருக்கும் ஹண்ட்டர் ஒரு கதவின் அருகில் வந்து நிற்கிறார்.

அந்த கதவினை தனது கைக்குட்டையில் லேசாகத் துடைக்கிறார்.

ஹண்ட்டர் நாசாவை கொள்ளை யடித்து என்ன என்ன செய்யப் போகிறார்? என்று முக்கிய தொலைக்காட்சிகள் உலகின் முக்கியப் புள்ளிகளிடம் பேட்டி எடுத்து ஒளீ பரப்ப்ப்ப்ப்ப்பிக் கொண்டே இருந்தனர்.

ஹண்ட்டர் தெற்காசியாவைச் சேர்ந்த கறுப்பர் என்ற காரணத்தினால்தான் ராணுவத்தளபதிகளும் அதிபரும் அவரைப் பின் தொடர்வதற்கு அவர்களின் ஈகோ இடம் கொடுக்கவில்லை என்று ஒரு தொலைக்காட்சியினர் ஒளிப்பரபியதில் உலகெங்கும் கொந்தளிப்பு ஏற்பட ஆரம்பித்தது.



கைகுட்டையில் துடைத்த உடன் கதவின் பளபளப்பு அதிகமாகி அந்த சந்தின் கடைசி பகுதி வரை அந்தக் கதவில் பிரதிபலிக்கிறது. கதவைத்திறந்த ஹண்ட்டர் நேராக மகா கணினியின் முன் செல்கிறார். கணினி கடவுச் சொல் கேட்கிறது. கடவுச் சொல்லாக தலைமைவிஞ்ஞானி கைரேகையைத் தர வேண்டும். அப்போது கணினி திறக்கும்படி அமைக்கப் பட்டிருக்கிறது.

ஹண்டர் கைக்குட்டையை எடுக்கிறார். கதவில் துடைத்த போது அவர் பெறுமனே துடைக்கவில்லை. கதவில் இருந்த தலைமை விஞ்ஞானியின் கைரேகையை ஒற்றி எடுத்து வந்திருக்கிறார். அந்த ரேகையை கணினிக்குத் தருகிறார். கணினி அவரின் கட்டுப் பாட்டுக்குள் வருகிறது. கணினியை இயக்கி செயற்கைச் சூரியனை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அதன் இறக்கைகளை சரியாக அவிழச் செய்து சரி செய்கிறார். அதிக் இணைக்கப் பட்டிருக்கும் வெடிகுண்டுகளை கழட்டி பிரபஞ்சத்தில் தனியே வெடிக்கச் செய்கிறார்.

வெளியே வரும்போது அழிவு,கொள்ளை,தீமை,கலகம் அமைப்பினைச் சேர்ந்தவர்களுடன் கடும் சண்டை நடக்கிறது. தனது கைக்குட்டையினைப் பயன்படுத்தி அனைத்துவகை நவீன ஆயுதங்களையும் அழித்து வெளியே வருகிறார்.

வெளியே வந்தவுடன் அமெரிக்க அதிபர் கட்டிப் பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஹண்ட்டர் லாங் லிவ், ஹண்ட்டர் லாங் லிவ் கோஷங்கள் வானம் வரை எட்டுகின்றது. உலக மகா கடத்தல் காரன் ஹண்ட்டர் அமரிக்க மக்களின் மனம் கவர்ந்த வில்லனாக மாறுகிறார்.

========================================================

இந்தியா :-

பிரபல தொழிலதிபர் தமிழ்செல்வன் பலகோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களுடன் தனியே காரில் போய் கொண்டிருப்பதாக சமூக விரோதிகளுக்கு தகவல் கிடைக்கிறது. அவரிடமிருந்து அதை அபகரிக்க திட்டமிடப் படுகிறது. ஏற்கனவே அவரைக் கொலை செய்வதற்கு முக்கிய புள்ளிகள் பலரும் பொன்னம்பலத்திடம் முன்பணம் கொடுத்து இருக்கிறார்கள். அவரது கார் தங்க நாற்கர சாலையில் பறந்து கொண்டிருக்கிறது. அவருக்குப் பின்னால் நூற்றைம்பது கார்களும் லாரிகளும் அவரைத் துறத்துக்கின்றன.

அவரும் சந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் நுழைந்து வெளியே வந்து முன்னேறிச் செல்கிறார்.


வேகமாக இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தவர் மின்னல் வேகத்தில் வண்டியை திருப்பி நிறுத்துகிறார். நிறுத்திய உடன் வண்டியில் இருந்து தமிழ்செல்வனும் அவரது உதவியாளரும் இறங்கி வருகின்றனர்.

தமிழ்செல்வா வைர நகையெல்லாம் கொடுத்துவிட்டு வந்தவழியே ஓடிடு என்று கர்ஜிக்கிறார். பொன்னம்பலம்.

ஹா.... ஹா.. அவர் ஒருமுறை போனார்னா அந்தவழிய அவரே மறந்திடுவார்..

சொல்லிவிட்டு சிரிக்கிறார், விவேக்

அப்போ நீங்க

வேட்டைக்காரன்.................
அகில உலகமும் நடுங்கும் ஹண்ட்டர்.


இப்போது மீசையைத் தடவிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் தமிழ்செல்வனின் மேல் பாயும் வெளிச்சம் அப்படியே பின்னால் பாய்கிறது. அவரது கூட்டத்தைச் சேர்ந்த் வாகணங்கள் ஒரே மாதிரியான வண்ணப் பூச்சுடன் நூற்றுக் கணக்கில் நிற்கின்றன..............

பொன்னம்பலம் அப்படியே வந்து அவரது காலில் விழுகிறார்.

=============================================================

வேட்டைக்காரன் வந்துக் கொண்டே இருப்பான்.

மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி
நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்

Sunday, May 10, 2009

சக பதிவர்களின் உதவி தேவை

எனக்கு இந்த சூழலில் மற்ற பதிவர்களின் உதவி தேவைப் படுகிறது.

நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் கிடையாது. சின்ன வயதில் இருந்த எழுத்து ஆர்வத்தில் மிச்ச சொச்சம் வைத்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

முடிந்தவரை யார் மனதையும் நோகடிக்காமல் எழுத வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.

எனது இந்தப் பதிவு எழுதும்போது சற்று வித்தியாமாக இருந்தது. இருந்தாலும் நண்பர்கள் அதில் பல நல்ல சிந்தனைகள் இருந்ததாகவே பின்னூட்டங்கள் இட்டு இருந்தனர். நண்பர் கிருஷ்ணா அதில் சில விஷயங்கள் நெருடல் கொடுப்பதாக எழுதி இருந்தார். உடனே அதை சரி செய்தும் விட்டேன்.



இரவு பத்து மணி அளவில் பார்த்த போது ஏறக்குறைய எதிர்மறையான விமர்சனத்துடன் ஒரு பதிவரின் பின்னூட்டம் இருந்தது. பின்னூட்டம் என்றால் எதிர்ம்றையாகக் கூட இருக்கலாம் என்ற நிலையில் அதற்கு எனக்குத் தெரிந்தவரையில் சற்று நகைச்சுவையாகவே பதிலளித்து இருந்தேன்.

இந்த நிலையில்

அவரது வலைப் பூவில்


சில நேரங்களில் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதறாங்க...

இது மாதிரி...
MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

//என்ன சொல்ல வரீங்கன்னு புரியலே. மாட்டையும், அம்மாவையும் எதுக்கு வீனா கலக்கி ஒரு பதிவு?//


என்று ஒரு இடுகையில் நடுப்பகுதியில் எழுதி யிருக்கிறார். இப்படி ஒரு எதிர்மறையான விமர்சனத்துடன் (அதுவும் பதிவரைப் பற்றி பதிவரின் எழுதும் தன்மையைப் பற்றி) ஒரு இடுகைக்கு அறிமுகம் அவசியமா?

எனக்கு சக பதிவர்களின் உதவி தேவைப் படுகிறது.

1. எனக்கு இப்போது ரோஷம் வரலாமா.?

2.ரோஷம் வந்தால் நான் என்ன செய்வது?

3.அப்படி ரோஷப் படுவதால் ஏற்படும் நல்லவிளைவுகள்தான் என்ன?

4.இப்படி ஒரு அறிமுகத்துடன் ஒரு தொடுப்பு கொடுத்ததால் அவருக்கு நன்றி சொல்லலாமா?

5.இதை கண்டு கொள்ளாமல் விட்டால் என்ன நிகழும்?

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails