ரொம்ப நாள் ஆகிவிட்டமாதிரி இருக்கிறது நமது விருப்பத் தலைப்பான ரீமேக் சுவடே தெரியாத தமிழ் படங்கள் வரிசையை ஆராய்வது,
இந்த முறை இரண்டு சூப்பர் ஹிட் படங்களை ஆராயலாம். சில வருடங்களில் ரீமேக் செய்யப்படங்கள் இவை.
பா(ட்)ஷா:-
பாஷா கதையைப் பற்றி சொலவதற்கு என்ன இருக்கிறது. அந்தப்படம் வந்த போது பெரும்பாலான வலைஞர்கள் பம்பரமாக சினிமா பார்ர்க்கும் பருவத்தில் இருந்திருப்பார்கள் என்பதால் அந்தக் கதையை அப்படியே விடுகிறேன். இந்தப் படம் வந்தபோது நாங்கள் மாநிலம் தழுவிய பொது தேர்வில் பங்கெடுக்க இருந்ததால் படம் பார்க்க அனுமதி இல்லை. நகரத்தில் இருந்த மாணவர்கள் பார்த்துவிட்டு படத்தில் சுத்தமாக நகைச்சுவையே இல்லை. அப்புறம் எங்க.. என்பதே அவர்கள் விமர்சனமாக இருந்தது. நக்மாவுக்கு லிப்ட் கொடுக்கும் முதல் காட்சியில் மட்டுமே நகைச்சுவை தலை காட்டும்.
அப்புறம் மே மாதத்தில்தான் படம் பார்த்தோம். கல்லூரிக்கு போனபின் தான் தெரிந்தது எந்த ரஜினி படம் என்றாலும் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டுதான் படத்திற்குச் செல்ல வேண்டுமாம். அப்போதுதான் நமது ரசனைக்கு அங்கீகாரம் கிடைக்குமாம். ஆனால் எங்கள் சீனியர் ராம்ஸ் அந்தப் படம் சுற்றுவட்டாரம் பதினெட்டுப் பட்டியில் எங்கு படம் போட்டாலும் பார்ப்பார். துணைக்கு எங்களை மாதிரி யாரையாவது கூட்டிச் செல்வார். ஒவ்வொரு ஜூனியர் மாணவரும் இருபத்தைந்து முறையாவது பார்த்திருப்பார்கள். இந்த நிலை அவர் பாஸ் செய்து பி.ஜி. வாங்கும் வரை தொடர்ந்தது.
ஏய்:-
இதில் சரத் குமார் பழனியில் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது லட்சியம் தங்கையை கலக்டெர் ஆக்குவது. ரஜினியும் அப்படியே... ஆனால் ரஜினிக்கு டாக்டர், இன்ஸ்பெக்டர். கல்யாணம் என்று பல லட்சியங்கள். இதில் தங்கை சொந்தத் தங்கை அல்ல. அதிலும் மாற்றாந்தாய் பிள்ளைகள்தான். இதில் நண்பன் சத்தியம் வாங்குகிறார். அதில் அப்பா...
ஃபிளாஷ்பேக்:- வில்லனின் அட்டூளியம் தாங்காமல் சரத் தனது நண்பருடன் சேர்ந்து பழி வாங்குகிறார். ரஜினியும் அப்படியே.. ரஜினியின் தந்தை கொல்லப் படுகிறார். இதில் நண்பன் கொல்லப் படுகிறார்.
தங்கைக்காக கண்டபடி அமைதி காக்கிறார்கள்
அவர்களுக்குள் அடங்கியிருக்கும் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ருவது தெரியும்.. விரல் மட்டும் தூக்குவது, ஒருதடவ சொன்னா என்று மட்டும் சொல்வது.. சரத்துக்கும் அப்படித்தான் கண் புருவம் துடிப்பது, சதைகள் இருகுவது என்று படிப்படியாக போகும்.
வில்லன் அவர்களது தங்கை மேல் கைவைக்க நினைக்க.. அவர்கள் சுயரூபம் வெளிப் படுகிறது. கடைசியில் வில்லன் அழிய சுபம்.
அதில் அவன யாருன்னு நினைச்ச என்று தாயார் ஆரம்பிப்பார். இதில் தங்கை பேசுவார்.
மிகவும் சீரியஸாக வந்த படம் பாஷா... வடிவேலு, தங்கை, நமிதா, மற்றும் பாட்டியுடன் சேர்ந்து நகைச்சுவையில் புகுந்து விளையாடி இருப்பார் சரத் குமார்.
இரண்டும் சூப்பர் ஹிட்தான். இருந்தாலும் நக்மாவைவிட நக்மாவின் ரீமேக் நமிதா சூப்பரோ சூப்பர் ஹிட்.